Search This Blog

Saturday, April 20, 2013

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta 2


அரசியல் கலாட்டா - Arasiyal Galatta 2


 Via: 
Liked · Yesterday 

காந்தி காங்கிரசை கலைக்க சொன்னார் என்ற விவாதம் நேற்று முன்தினம் தமிழக சட்டசபையில் விவாததுக்கு வந்தது. இதில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜ்யதரணி "காந்தி ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. காங்கிரசின் வரலாறு தெரியாமல் பேசாதிர்கள் " என்று அதிமுக உறுப்பினர்களை கடுமையாக சாடினார். முதல்வர் அப்போது பெரும் அமைதி காத்தது ஆச்சர்யமாக இருந்தது.

பிறகு நேற்று அவைக்கு வந்த முதல்வர் காந்தி காங்கிரசை கலைக்க சொன்னது உண்மை . நேற்று என்னிடம் ஆதாரம் இல்லாததால் நான் குறுக்கிட்டு பேசவில்லை. இன்று இதோ ஆதாரத்துடன் வந்து இருக்கிறேன். மகாத்மா காந்தி இந்த தேதியில் காங்கிரசை கலைத்து விட சொன்னார் என்று குறிப்பிட்டு சொன்னவுடன் விஜயதரணியால் பேசவே முடியவில்லை. மேலும் முதல்வர் காங்கிரஸ் வரலாறு தெரியாதவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக வந்து உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று சொல்லவும் 'அலம்பல்' விஜயதரணிக்கு மூஞ்சி செத்து விட்டது.

காங்கிரஸ்காரர் : பார்த்தாயா வயல் வெளியில் கூட நடக்கும் எங்கள் தலைவர்!!

பதில்: வயலில் நடப்பவரெல்லாம் தலைவர் என்றால், எங்க ஊருல எல்லாரும் மிக பெரிய தலைவர் தம்பி!! நானும் தான்!!
இன்று (31.03.13) காலை ஒன்பது மணியளவில் சென்னை பல்லாவரம் செல்வதற்காக பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் தாம்பரம் செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தேன்.


அந்த பேருந்தினுள் ஏறிய இரு இளைஞர்கள் தங்களை கல்லூரி மாணவர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு ஈழ தமிழன படுகொலை குறித்தும், ஈழ தமிழின படுகொலையை நடாத்திய கொலைகாரன் ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் பற்றி பேருந்து பயணிகளிடம் பரப்புரை செய்தனர்.


இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் விடுமுறை தினங்களில் (ஏற்கனவே கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன) சினிமா, விளையாட்டு என்று சுற்றித் திரிகிற நிலையில் அந்த மாணவர்கள் தமிழினத்திற்கு நேர்ந்திட்ட அவலங்கள் குறித்து பரப்புரை செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதிலும் குறிப்பாக பயணிகள் அந்த மாணவர்களின் பரப்புரையை நன்றாக கவனித்தது சிறப்புக்குரியது .


ஒரு சிறு குறை. அந்த மாணவர்கள் ராஜபக்சே போர்க்குற்றம் புரிந்திருக்கிறார் என்று பரப்புரை செய்தார்கள். போர்க்குற்றம் என்று அழைப்பதற்கு பதிலாக இனப்படுகொலை என்றே வலியுறுத்த வேண்டும். மாணவர்களை ஒருங்கிணைக்கிற ஒருங்கிணைப்பாளர்கள் இது குறித்து போதிய பயிற்சி கொடுக்க வேண்டும். மேலும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தின் வாயிலில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரிலும் ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றே எழுதப்பட்டு இருந்தது. ஆகவே மாணவர்கள் தங்கள் பிரச்சார யுக்தியில் சில மாறுதல்களை கொண்டு வர வேண்டும்.


அந்த மாணவர்கள் தோழர். மருதையன் அவர்கள் இணைய தளங்களில் எழுதிய கருத்துக்களை தொகுத்து அச்சடிக்கப்பட்ட ராஜபக்சேவை தண்டிப்பது எப்படி என்கிற சிறு நூலை விற்பனை செய்தனர். அந்த புத்ததகத்தை நிறைய பேர் ரூபாய் கொடுத்து வாங்கியதை கண்டேன்.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இளையோரிடம் ஒப்படைத்து விட்டேன் என்று தலைவர் பிரபாகரன் அவர்கள் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது என்பதை நான் உணர்ந்து கொண்டேன் .


கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்க இருக்கிறது என்றாலும் கூட தொடர்ச்சியாக மாணவர்கள் தமிழீழ விடுதலைக்கான பரப்புரையை செய்ய வேண்டும். தேர்வுகளுக்கு பிறகு போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்."சிகரெட்டை பற்ற
வைத்தவரை தேசியவாதியாக
கொண்டாடும் இந்த நாட்டில்,சுதந்திர
தீயை பற்றவைப்பவர் என்றும்
தீவிரவாதி தான்''
அங்க தூரமா பாரு டாடி! ஒரு கையில ஆல்பமும் இன்னொரு கையில வெத்தலைப் பாக்கு பெட்டியும் எடுத்துக்கிட்டு ஒருத்தர் வராரா? அவர்தான் வேல்டு ஃபேமஸ் சுப்ரமணிய சாமி "மாமா"

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta 1

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta 1


 Via: 
Liked · Yesterday 

அஞ்சலி புகார் விவகாரத்தில் அரசியல் சதி உள்ளது - டைரக்டர் களஞ்சியம்
#ஒரு வேளை நம்ம ஒபாமாவா இருக்குமோ? நம்ம வளர்ச்சி புடிக்காம அரசியல்ல ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்களோ!இலங்கை தமிழர்களுக்கு நீதி வேண்டி தொண்டர்களுடன் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்...(இடம்: மதுரை புதிய பேருந்து நிலையம்)

# இத பார்த்தா கண்டன ஆர்ப்பாட்டம் மாதிரியா தெரியுது...மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி :(


தமிழ் நாட்டில காங்கிரஸ் தலைவர் யாருனே காங்கிரஸ்க்கு தெரியல ....!!! பின்ன இவனுக எல்லாம் தமிழ் நாட்டில தலைவர சரி பண்ணி ... தமிழ் நாட்ட கவனித்து ..... ஈழத்த வேற உருவாக்குவானுவாங்கனு நம்புராணுங்க... திரும்பவும் முதல்ல இருந்து சொல்லட்டா ???

ஒருத்தன் செத்து 3 வருஷம் ஒருத்தன மாத்தி ஒரு வருஷம் ... என்னடா நடக்குது அங்க ???
இங்கிலாந்தின் பிரதமர்.. டேவிட் கேமரூன்... பொது இரயிலில் சீட் இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்த போது ...

# இப்படி எல்லாம் நம்ம ஊருல மட்டும் நடந்துச்சு... அவ்வளவு தான்.. சூரியன் அடுத்த நாள்ல இருந்து மேற்கே உதிச்சிடும்