Search This Blog

Friday, November 9, 2012

Twilight - திரை விமர்சனம்

Twilight - திரை விமர்சனம்
File:Twilight (2008 film) poster.jpg
மிகவும் புகழ் பெற்ற "ட்வைலைட்"(Twilight) பட வரிசையில் முதலாவதாக  வந்த படம்.அமெரிக்காவின் புகழ் பெற்ற எழுத்தாளர் ஸ்டேபானி  மேயர் (Stephenie Meyer)  எழுதிய   "ட்வைலைட் சாகா" (Twilight Saga) நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட  படம் தான்   "ட்வைலைட்"(Twilight).

இப்படத்தை பற்றி தெரியாதவர்கள் மிகக் குறைவே. ட்வைலைடின் ரசிகர்கள் வரிசையில் என்னை முதல் ஆளாக சேர்த்துக் கொள்ளலாம். இது வரை வெளியான அனைத்துப் பகுதிகளையும் பல முறை பார்த்திருக்கிறேன். இத்திரைப்படத்தின் கடைசி பதிப்பு வரும் மாதம் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. 


                                         கதை:

ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் பற்றி பல திகில் கதைகள்  படித்திருக்கிறோம், ஆனால் ஒரு காட்டேரிக்கும் (Vampire) மனித பெண்ணுக்கும் காதல் உண்டானால் என்ன ஆகும் , அதனால் அவர்கள் என்னென்ன விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதை.

தாய் தந்தையின் விவாக ரத்துக்கு பிறகு தாய் மறுமணம் செய்ய தந்தை வசிக்கும் "ஃபோர்க்ஸ்"க்கு (Forks) வந்து குடியேறுகிறாள் 17 வயதான் கதையின் நாயகி "பெல்லா ஸ்வான் "(Bella Swan). மிகவும் அமைதியான அதிகம் பேசாத பெண் அவள். கல்லூரியில் சேரும் முதல் நாளே எல்லோருடனும் நட்பாகும் அவளுக்கு புரியாத புதிராகவே இருக்கிறான் கதையின் நாயகன் "எட்வர்ட் குல்லன்" (Edward Cullen). முதல் சந்திப்பிலேயே அவன் வசம் ஈர்க்கப் படுகிறாள் பெல்லா,ஆனால் அவனோ அவளை விட்டு விலகி விலகி செல்கிறான்.


ஒரு நாள் கல்லூரியில் ஒரு மாணவனின் கார் கட்டுப்பாட்டை இழந்து பெல்லாவை அசுர வேகத்தில் நெருங்க,என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறாள். அப்போது கண்ணிமைக்கும் நொடியில் தன் கைகளால் காரை தடுத்து நிறுத்தி அவளை காப்பாற்றுகிறான் எட்வர்ட்.

அவனின் அசுர பலத்தையும் அடிக்கடி நிறம் மாறும் அவன் கண்களையும் கண்டு சந்தேகப்படும் அவள் அவனிடமே கேட்க பதிலளிக்க மறுக்கிறான் அவன்.

அதே சமயம் அவளுக்கு அறிமுகமாகிறான் "ஜேக்கப் ப்ளாக்" (Jacob Black). அவன் மூலமாக "ஓநாய்கள்" (Werewolf) மற்றும் "ரத்தக் காட்டேரிகள்" (Vampires) என்று இரு இனம் இருப்பதைத் தெரிந்துக்கொள்கிறாள். மேலும் பல ஆராய்ச்சிக்கு பிறகு எட்வர்ட் ஒரு ரத்தக் காட்டேரி என்பதைக் கண்டுப்  பிடிக்கிறாள் பெல்லா.

ஒரு  கட்டத்தில் இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அப்போது அவர்கள் உணவுக்காக விலங்குகளை மட்டுமே வேட்டையாடுவதையும் தெரிந்துக் கொள்கிறாள். அதே சமயம் ஃபோர்க்ஸில் மர்மமான முறையில் பலர் இறந்து போக காரணம் புரியாமல் திணறுகிறது போலீஸ்.

பெல்லாவை தனது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறான் எட்வர்ட். ரோசலி (Rosalie) என்னும் காட்டேரியை தவிர அனைவருக்கும் அவளை பிடித்துப் போகிறது. காட்டேரிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சக்திக் கொண்டவர்கள். எட்வர்ட் - மிகவும் வேகமானவன், அடுத்தவர்கள் மனதில் ஓடும் எண்ணங்களை படிக்கும் சக்திக் கொண்டவன். ஆலீஸ் (Alice) - எதிர்க்காலத்தை கணிக்கும் சக்திக் கொண்டவள். பெல்லாவின் நெருங்கிய தோழியும் இவள் தான். 


காதலர்கள் மகிழ்ச்சியாக நாட்களை கழித்துக் கொண்டிருக்க குறுக்கே வருகிறார்கள் மனிதர்களை வேட்டையாடும் 3 காட்டேரிகள். "ஜேம்ஸ்,விக்டோரியா,லாரென்ட்" (James, Victoria, Laurent) இவர்களில் ஜேம்சும்,விக்டோரியாவும் காதலர்கள். பெல்லாவின் வாசத்தால் ஈர்க்கப்படும் ஜேம்ஸ், எட்வர்ட் அவள் மேல் வைத்திருக்கும் காதலையும். எந்நேரமும் அவளை காக்கும் அவன் நடத்தையும் பார்க்கும் ஜேம்ஸ் அவளை வேட்டையாடிக் காட்டுவதாக சவால் விடுகிறான்.


இதனால் பெல்லாவை காப்பாற்ற திட்டம் தீட்டும் குல்லன் குடும்பத்தினர் அவளை பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்து செல்கின்றனர். தாயை கடத்தி விட்டதாக பொய் சொல்லி அவளை நயவஞ்சகமாக தன் வலையில் சிக்க வைக்கிறான் ஜேம்ஸ்.


அவனிடம் இருந்து தப்பிக்க போராடும் பெல்லாவின் கைகளில் ஜேம்ஸின் பற்கள் பதிய,காட்டேரியின் விஷம் உடலில் பரவ தொடங்கி வலியால் துடிக்கிறாள். பொதுவாக காட்டேரியினால் கடிக்கப் படும் மனிதர்கள் காட்டேரிகளாக மாறி விடுவார்கள். 


காட்டேரியின் விஷம் உடலில் பரவி வலியால் துடிக்கும் பெல்லாவின் கதி என்ன? எட்வர்ட் அவளை காப்பாற்றினான? ஜேம்ஸ் என்ன ஆனான்? காதலர்கள் மீண்டும் இணைந்தார்களா?போன்ற கேள்விகளுக்கு  விடை தருகிறது படம்.


நடிகர்/நடிகைகள்:


பெல்லா ஸ்வான் (Bella Swan) - கிறிஸ்டன் ஸ்டீவர்ட் (Kristen Stewart): பெல்லா ஸ்வானாக நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் சரியான தேர்வு. கனக் கச்சிதமாக இந்த வேடத்திற்குப் பொருந்துகிறார். எட்வர்ட் வசம் ஈர்க்கப்படுவதும், காதல் வயப்படுவதும் பின்னர் காதலன் ஒரு காட்டேரி என்று தெரிந்ததும் அவனை மறக்க முடியாமல் தவிப்பது என்று தன் பங்கை சரியாக செய்து இருக்கிறார்.


"எட்வர்ட் குல்லன்" (Edward Cullen): 


கண்ணியமான காதலனாக வந்துப் போகிறார். 108 வயதான காட்டேரியாக வரும் இவர் காதலியின் தந்தையிடம் காதலியை வெளியே அழைத்து செல்ல அனுமதி கேட்பது, வலிய வரும் காதலியிடம் அத்து மீற மாட்டேன் என்று அடம் பிடிப்பது என்று தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்.

"ஜேக்கப் ப்ளாக்" (Jacob Black) :


படத்தின் இரண்டாவது நாயகன் இவர். ஆனால் இவரது முழுப் பங்களிப்பும் அடுத்தடுத்த பகுதிகளில் தான். பெரும்பாலும் சட்டை அணியாமல் வருவது இவர் ஸ்டைல்.

"ட்வைலைட்"(Twilight) ஒரு ஆரம்பம் மட்டுமே அதனால் மற்ற நடிகர்களைப் பற்றி குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை. 

"ட்வைலைட்"(Twilight) - 

No comments: