Search This Blog

Saturday, November 10, 2012

மீண்டும் இணைந்த ட்வைலைட் காதலர்கள்

மீண்டும் இணைந்த ட்வைலைட் காதலர்கள் 

ட்வைலைட் ரசிகர்களின் இப்போதைய பரபரப்பு இது தான்.

"ட்வைலைட்" (Twilight) திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் நெஞ்சில் ஆழமாய் இடம் பிடித்த நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் (Kristen Stewart)
இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் (Robert Pattinson). 

2008'ம் ஆண்டு ட்வைலைட் முதல் பகுதி படப்பிடிப்பு தளத்தில் தான் இருவரும் முதலில் சந்தித்துக் கொண்டார்கள். படம் முடியும் தருவாயில் படத்தில் வருவது போலவே இவர்களுக்குள்ளும் காதல் முளைக்க அன்று முதல் சேர்ந்தே இருக்கிறார்கள். இருவரும் வெளிப்படையாக தங்கள் காதலை ஒத்துக் கொள்ளா விட்டாலும் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்தே வசிப்பதாக தெரிவிக்கிறது பத்திரிக்கை மற்றும் நெருங்கிய வட்டாரங்கள்.

இவர்களின் காதல் கெமிஸ்ட்ரி திரையிலும் பிரதிபலிக்க இவர்கள் காதலிக்க மாட்டார்களா என்று ரசிகர்களே எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விட்டனர். சொந்த வாழ்க்கை குறித்து கேட்ட போதெல்லாம் மௌனம் சாதித்தார்கள் இருவரும். ஒரு பேட்டியில் இக்கேள்விக்கு பதிலளித்த நடிகை கிரிஸ்டன் தன் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைக்கவே விரும்புவதாக தெரிவித்தார்.

ட்வைலைடின் இறுதி பதிப்பை ரசிகர்கள் ஆவலாய் எதிர்ப்பார்த்து இருந்த நிலையில் தான் இடி போல் வந்தது கடந்த ஜூன் மாதம் U.S. மேகசீன் வெளியிட்ட அந்த செய்தி.22 வயதான நடிகை கிறிஸ்டன் 41 வயதான இயக்குனர் ரூபெர்ட் சண்டேர்ஸ் (Rupert Sanders) இருவரும் தத்தம் ஜோடிகளை ஏமாற்றுகிறார்கள் என்பதே அது.

கிறிஸ்டன் நடித்த Snow White and the Huntsman  படத்தை இயக்கியவர் தான் இந்த ரூபெர்ட் சண்டேர்ஸ் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தை. இவரது மனைவியும் நடிகை தான். பத்திரிக்கை வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியானார்கள் இரு தரப்பினரும்.


ராபர்ட்டை காதலிக்கும்போதே திருமணமான இன்னொருவருடன்  வைத்திருந்த தொடர்பு அம்பலமானத்தில் மிகவும் உடைந்துப் போனார் கிறிஸ்டன். இச்செய்தியால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ரசிகர்கள் தான். ஒரு ரசிகை ஒரு படி மேலே பொய் கதறி அழுதபடி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாத க்றிஸ்டனும், ரூபெர்டும் தனி தனியே ஒரு மன்னிப்பு செய்தியை வெளியிட்டனர். அது வரை மூடி மறைத்த காதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் கிறிஸ்டன்.

அவர் கூறியது இது தான், "I'm deeply sorry for the hurt and embarrassment I've caused to those close to me and everyone this has affected. This momentary indiscretion has jeopardized the most important thing in my life, the person I love and respect the most, Rob. I love him, I love him, I'm so sorry."

அதாவது நான் ராபர்ட்டை மிகவும் காதலிக்கிறேன், என்னுடைய இந்த செயலால் என் நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் தலை குனிவையும் ஏற்படுத்தி விட்டேன். என் செயலுக்கு வருந்துகிறேன்.

ரூபெர்ட் கூறியதாவது,'I am utterly distraught about the pain I have caused my family. 'My beautiful wife and heavenly children are all I have in this world.'He told People: 'I love them with all my heart. I am praying that we can get through this together.'


அதாவது என்னுடைய இச்செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். இந்த உலகத்தில் எனக்கு இருக்கும் ஒரே துணை என் அழகான மனைவியும் என் இரு குழந்தைகளும் தான். அவர்களுக்கு மிகுந்த தலை குனிவை ஏற்படுத்தி விட்டேன். நான் அவர்களை உண்மையாக நேசிக்கிறேன். குடும்பமாக சேர்ந்து இதை எதிர் கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Can they stay together? Rupert Sanders and Liberty Ross arrive with children Tennyson and Skyla as Universal Studios hosted an industry screening of Snow White And The Huntsman in Los Angeles in May

அதன் பிறகு இருவரது வீட்டிலும் பூகம்பம் வெடித்தது. கிறிஸ்டன் வீட்டை விட்டு வெளியேறினார் ராபர்ட். குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார் ரூபெர்ட்டின் மனைவி,அதோடு விவாகரத்து நோட்டீசும் அனுப்பினார்.

என்ன செய்வது என்று திகைத்த கிறிஸ்டனும், ரூபெர்ட்டும் மீண்டும் தங்கள் துணைகளை பெற போராடினர். பிரிந்த ஜோடிகள் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்களும் ஒரு வித படபடப்போடு காத்திருக்க 

கிறிஸ்டனின் அழைப்புக்கு ராபர்ட் செவி சாய்க்கவில்லை. கிறிஸ்டன் இப்படி செய்வார் என்று ராபர்ட் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. அவரை மிகவும் நம்பினார். விஷயம் தெரிந்ததும் மிகவும் மனம் உடைந்த அவர் கதறி அழுததாக நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர். அதோடு கிறிஸ்டனை அவர் திருமணம் செய்ய தீர்மானித்து இருந்ததாகவும், தன்னுடைய வாழ்வில் கிறிஸ்டன் இடத்தில் வேறொரு பெண்ணை நினைத்துப் பார்க்க கூட அவரால் முடியவில்லை என்றார் அவரது நெருங்கிய நண்பர்.

சளைக்காத கிறிஸ்டன் மீண்டும் மீண்டும் ராபர்ட்டை அழைத்தார், தான் முத்தமிட்டது உண்மை தான் ஆனால் உடல் ரீதியாக எந்த விதமான தொடர்ப்பும் வைத்துக் கொள்ளவில்லை என்று அழுதார். மறுபுறம் ரூபெர்ட்டும் தன் மனைவியிடம் கிறிஸ்டனுடன் பழகியது உண்மை தான் ஆனால் உடல் ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்.

எறும்பு ஊர ஊர அம்மியும் தேயும் என்பது போல் இளக ஆரம்பித்தார் ராபர்ட். அவரது நண்பர் ஒருவர் கூறுகையில் கிறிஸ்டன் இடத்தில் வேறு எந்தப் பெண்ணையும் நினைக்க அவரால் இயலவில்லை. தன்னைப் முழுவதும் புரிந்துக் கொண்ட  ஒரே பெண் கிறிஸ்டன் தான் என்று அவர் நினைத்தார். ரூபெர்ட்டுடன் உடல் ரீதியாக எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை என்று கிறிஸ்டன் கொடுத்த விளக்கத்தை அவர் ஏற்றுக் கொண்டார். அவரை மன்னிக்க அது தான் காரணம் என்று கூறினார். 

இதை குறித்து கூறிய கிறிஸ்டன் தவறு செய்வது மனித இயல்பு, நாம் செய்யும் தவறுகள் மூலமாக தான் புதிய பாடம் கற்றுக் கொள்கிறோம் என்றுக் கூறினார்.

இதையடுத்து ராபர்ட்டுடன் இணைந்து வாழ 2 மில்லியன் மதிப்பில் 3000 சதுர அடியில் ஒரு பங்களாவை வாங்கினார்.  எல்லோரும் வெளியாக போகும் ட்வைலைட்  இறுதி பாகத்தின் வெற்றி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காகவே இந்த நாடகம் என்று கூற, அதை பற்றி எல்லாம் கவலைப் படாமல் இரு நாய்களையும் வாங்கி ஜரூராக புது பங்களாவில் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆரம்பித்து விட்டனர் இந்த ஜோடி.

எது எப்படியோ ட்வைலைட் ரசிகர்களுக்கு இவர்கள் இணைந்த செய்தி மிகவும் மகிழ்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. ரூபெர்ட்டின் இந்த விவகாரம் வெளியானதிலிருந்து தன் திருமண மோதிரத்தை கழற்றி வைத்திருந்த ரூபெர்ட்டின் மனைவி சமீபத்தில் கலந்துக் கொண்ட ஒரு விழாவில் திருமண மோதிரம் அணிந்திருந்ததை கவனித்தவர்கள் அவர்களும் இணைந்திருக்க கூடும் என்று அனுமானித்தனர். 

வீட்டை விட்டு வெளியேறிய ரூபெர்ட்டின் மனைவி விரைவில் தன் குழந்தைகளுடன் கணவர் வீட்டில் குடியேறி விடுவார் என்று என்று தெரிவிக்கிறது நெருங்கிய வட்டாரம்.

எது எப்படியோ பிரிந்தவர்கள் இணைந்தால் மகிழ்ச்சி தானே.

No comments: