Search This Blog

Wednesday, November 7, 2012

ராவணன் - திரை விமர்சனம்

ராவணன் - திரை விமர்சனம் 
ராமாயணம் கதைய கொஞ்சம் காப்பியடிச்சி கொஞ்சம் மசாலா மிக்ஸ் பண்ணி எடுக்கப்பட்ட usual மணிரத்தினம் படம்.
இது தான் கதை சுருக்கம்.

நடிப்பு:

நிஜப்பெயர் -- -------------------------character ----------------------------------- ---------- சினிமா'ல 
விக்ரம்---------------------------------- இராவணன்-(நல்லவன்)- ---------------------வீரா (a) வீரையா 
பிரித்விராஜ் --------------------------ராமன்- (வில்லன்)- -------------------------------தேவ் 
ஐஸ்வர்யா ராய்---------------------சீதா- (ப்ரித்விராஜ் பொண்டாட்டி)------- ராகினி 
கார்த்திக்-forest officer -------------அனுமார்----------------------------------------------ஞான பிரகாசம் 
ப்ரியாமணி- விக்ரம் தங்கச்சி-சூர்பனகை-------------------- ---------------------வெண்ணிலா 
பிரபு - விக்ரமோட  அண்ணன்
முன்னா-விக்ரமோட  தம்பி --------------------------------------------------------------சக்கரை 
ரஞ்சிதா -----பிரபு பொண்டாட்டி----(நித்தியானந்தா ஸ்பெஷல்)

கதை:


எப்பவும் போல இருட்டுகுள்ள torch அடிச்சு பாக்குற ஒளிப்பதிவு. படம் முழுக்க மழை பெஞ்சுகிட்டே இருக்கு. சோ'ன்னு பாயுற அருவி, இல்ல'னா மழை. இல்ல'னா சுத்தி கண்ணை மறைக்கிற பனி.படம் முடியுற வரைக்கும் தண்ணிக்குள்ள இருக்கிற மாதிரி ஒரு உணர்ச்சி.
விக்கிரம பிடிக்க அந்த village 'க்கு வராரு பிரித்வி.வந்த இடத்துல அவர் பொண்டாட்டி ஐஸ்வர்யா'வ, விக்ரம் கடத்திட்டு போறாரு. கடத்திட்டு போய் மெகா மலை உச்சிக்கு வந்து பரு'ன்னு ப்ரித்விக்கு சவால் விடுறாரு. (விக்ரம் அடிக்கடி கோழி மாதிரி பக் பக் பக்'ன்னு சொல்றாரு, டம் டம் டம் டம் டமார்'ன்னு சொல்றாரு. என்ன எளவோ. )

பிரித்வி  forest officer கார்த்திக்'அ வழி காட்டுறதுக்கு கூட கூட்டிட்டு காட்டுக்குள்ள போறாரு.( கார்த்திக் இந்த படத்துல குரங்கு மாதிரி மரத்துக்கு மரம் தாவி காமெடி பண்றாரு. அனுமார் கேரக்டர்'ன்னு நிஜமாவே மரத்து மேல தாவுறாரு.என்ன கொடுமையோ.)

ஐஸ்வர்யா 'வ விக்ரம் சுட்டு கொல்ல  போறாரு, உன் கையாள சாக மாட்டேன்'ன்னு மலை மேல இருந்து ஐஸ்வர்யா குதிக்க, காப்பாத்த இவரும் பின்னாடியே போறாரு.இதுல ஐஸ்வர்யா மேல விக்ரமுக்கு லவ்  பிறக்குது. (மலைல இருந்து குதிச்சா லவ் வருமா?)
ஐஸ்வர்யா தப்பிக்க முயற்சி பண்றதும், இவரு புடிச்சு கட்டி போடுறதும் வழக்கமான பாணி.அப்புறம் அடிகடி குருவம்மா எங்க கூடையே இருந்திரு'ன்னு சொல்றாரு. நீங்க எல்லாம் என் இப்டி பண்றீங்க'ன்னு ஐஸ்வர்யா கேக்க flashback வருது.

விக்ரம் தங்கச்சி ப்ரியாமணி ஒருத்தன லவ் பண்றா.கல்யாணத்தன்னைக்கு விக்கிரம பிடிக்க வர ப்ரித்விராஜ் ,விக்கிரம கழுத்துல சுடுறாரு.
ப்ரித்விராஜ் கூட வர போலீஸ் ஹேமந்த், ப்ரியாமணிய ஸ்டேஷன்'கு தூக்கிட்டு போய் கெடுககுறாரு. அதனால ப்ரியாமணி உண்மைய எல்லாம் விக்ரம் கிட்ட சொல்லிட்டு தற்கொலை பண்றா.இது தான் முன்கதை.

பருத்திவீரனுக்கு பிறகு ப்ரியாமணி'க்கு rape scene தான்'ன்னு சினிமா முடிவே பண்ணிரிச்சு. (நல்ல வேளை கற்பழிப்பு காட்சி'ன்னு வச்சு நெளிய வைக்காம, ப்ரியாமணிய வாயால சொல்ல வச்சு மேட்டர்'அ முடிகிறாரு நம்ம டைரக்டர்.)

கடைசில அனுமார் கார்த்திக் தூது வராரு. பதிலுக்கு சமாதானம் பேச போன விக்ரம் தம்பி'அ ப்ரித்வி நம்ப வச்சு போட்டு தள்ளுறாரு.
பதிலுக்கு விக்ரம் ப்ரித்வி கேம்ப்'ல புகுந்து எல்லாத்தையும் கொளுத்துறாரு. 

விக்ரம் ஒரு தொங்கு பாலத்தோட  2 முனைளையும் தீ வச்சு ப்ரித்விய சண்டைக்கு கூப்பிடுறாரு .2 பேரும் பெரிய தொங்கு பாலத்துல நின்னு சண்டை போடுறாங்க. தொங்கு பாலம் அத்து கீழ விழுது.

2 பேரும் மலையேறி வராங்க. நான் உன் கூட இருந்தா என் புருஷன உயிரோட விடுவியா'ன்னு ஐஸ்வர்யா கேக்க, விக்ரம் மனசு மாறி ௨ போரையும் சேர்த்து வச்சிட்டு போறாரு. (மலைல இருந்து கீழ விழுந்தும் 2 பேருக்கும் சின்ன அடி கூட படல,அடுத்த கொடுமை.இவுக மனுஷ பயலுகளே இல்ல போல.)

அப்புறம் train 'ல போகும்போது, ஐஸ்வர்யா'வ ப்ரித்வி சந்தேஹபடுறாரு. நீ சொக்க தங்கம் இல்ல, எச்ச தங்கம்'ன்னு வீரா சொன்னான்.medical checkup பண்ணனும்'ன்னு ப்ரித்வி சொல்ல. ஐஸ்வர்யா train 'அ பாதில நிறுத்தி இறங்கி வீரா'வ தேடி போறா.

விக்ரம் கிட்ட போய் என் புருஷன் கிட்ட என்ன போய் தப்ப சொன்னியா'ன்னு கேக்க, இல்ல உன் பொண்டாட்டி சொக்க தங்கம் , எங்க கை எச்ச கை தான், உன் சொக்க தங்கத்த காடு கருப்பு படாம,பதுகாப்ப வச்சிருக்கோம்.அவ அழகுக்காக உன்ன கொன்னாலும் தப்பில, உயிரோட விட்டாலும் தப்பில, என் மனசு மாறுறதுக்கு முன்னாடி அவல கூட்டிட்டு போ'ன்னு சொன்னதா சொல்ல ஐஸ்வர்யா சிரிச்சுகிட்டே விக்ரம் மாதிரி பக் பக் பக்'ன்னு சொல்றா. 

விக்ரம்'ம் சிரிக்கிறான்.உன்ன திரும்ப பாத்ததுல ரொம்ப சந்தோசம்'ன்னு சொல்லி, வந்த காரணம் கேக்க ப்ரித்வி சந்தேகப்பட்டத  சொல்ல, விக்ரம் பதிலுக்கு அவன் உன்ன சந்தேஹபடல, என்ன பிடிக்க உன்ன கருவியா பயன்படுத்தி இருக்கான்'ன்னு சொல்லி ப்ரித்விய தேடுறாரு.

பெரிய போலீஸ் படையோட வந்து  ப்ரித்வி விக்ரம்'அ சுட்டு தள்ளுறாரு. ஐஸ்வர்யா விக்ரம்'அ காப்பாத்த நடுல விளரா , விக்ரம் அவள தள்ளி விடுறாரு. குண்டடி பட்டு சிரிச்சுகிட்டே ஐஸ்வர்யா'வ பாதபடி மலை உச்சி'ல இருந்து சந்தோஷமா கீழ விழுறாரு. ஐஸ்வர்யா வீரா'ன்னு  கத்துறா .

கடைசில வில்லன் நல்லவனும் ,கதாநாயகன் கெட்டவனும். முடியலடா ராசா. பரவாயில்ல   ஒரு தடவை பாக்கலாம்.
ராவணன்- 

No comments: