Search This Blog

Thursday, June 28, 2012

கோடை நோய்களை விரட்டும் வழிகள்


கோடை நோய்களை விரட்டும் வழிகள்
தமிழகத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பே  தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கும் வெப்பத்தையே சமாளிக்க முடியவில்லை. இதில் கோடை கத்திரி வெயிலில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து டாக்டர் திருத்தணிகாசலம் கூறியதாவது:-
 
கோடை காலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக உடலில் கொப்பளங்கள் ஏற்படும், மேலும் வியர்குரு, சின்னம்மை போன்ற நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலம் என்றாலே உணவு விஷயத்தில் ஜாக்கிர தையாக இருக்கவேண்டும் என்று சொல்லித்தர வேண்டியதில்லை.

அந்த எச்சரிக்கை உணர்விற்கு சில யோசனைகள் இங்கே:
 
இளநீர்::
 
இளநீரில் இருப்பவை: சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடைக்காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்னபிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால், உடல் வெளிறிவிடும்.
 
மயக்கம், நாடித்துடிப்பு தளர்ந்து தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம். உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறு வதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து, நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராகப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உடலின் வெப்ப நிலையை உள்வாங்கி, சரிவர வெளியே தள்ளுகிறது.
 
இதனால் கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேலை அயர்ச்சி போன்ற தொந்தரவுகள் தொலைந்து போகிறது. இளநீரை உடனடியாகக் குடித்து விடுவதுதான் நல்லது. வாங்கி இதனை பிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல.
 
இளநீரின் மருத்துவக்குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதனை வாங்கிய அரைமணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இதில் எதனையும் கலந்து குடிக்கக்கூடாது.  இதய நோயாளி களுக்கு இளநீர் இதம்.
 
வெள்ளரிக்காய்::
 
வெள்ளரியில் நீர்ச்சத்துடன், மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக, வெள்ளரிப்பழத்தில் நிறைய `கார்போ ஹைட்ரேட்டுகளும்', `புரோட்டீனும்', கால்சியமும், தாது உப்புக்களும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட, வெள்ளரிப்பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனெனில், வெள்ளரிப்பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது.
 
வெள்ளரிப்பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளைக் கொடுத்து, வெப்பத் தாக்கலில் இருந்து வெளியேற உதவுகிறது. சர்க்கரை வியாதி உள்ள வர்கள் மட்டும் வெள்ளரிப்பழம் மிகவும் இனிப்பாக இருந்தால், சாப்பிடுவதில் அக்கறை தேவை.
 
வெள்ளரியின் வெவ்வேறு வகைகள்::
 
இப்போது நாட்டு வெள்ளரி, சீமை வெள்ளரி என்று பிஞ்சிலும் சரி, பழத் திலும் சரி வெவ்வேறு வகைகள் வருகின்றன. எல்லா வகையும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டவை தான். சத்துக்கள் இரண்டு வகைகளிலும் சரிசமம்தான். விருப்பப்படி சாப்பிடலாம்.
 
சாப்பிட வேண்டிய::
 
நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை முடிந்தளவு சேர்த்துக் கொள்ளலாம். கோடையில் சைவ உணவுகளே உகந்தது. அசைவ உணவாக இருப்பின் கடல் உணவுகள் விரைவில் செரித்து விடக்கூடிய தன்மை வாய்ந்தவை. குளிர்ச்சியான உணவுகளில் கீரைகளும், பழங்களும் முதல் இடத்தைப் பெறுகின்றன. ஆனால் பப்பாளி, சீத்தாப்பழம், எலுமிச்சை, தர்ப்பூசணி, அத்தி ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அதிகரிக்காது.
 
தவிர்க்க வேண்டியவை::
 
பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், சேப்பங்கிழங்கு, உருளை போன்ற கிழங்கு வகைகள், வாழைக்காய், மரவள்ளி, கேரட் மற்றும் கட்டாயம் மதுவகைகளைத் தவிர்த்தல் வேண்டும். இனிப்பான வெல்லம், சர்க்கரை, தேன், ஜாம், வெண்ணெய், நெய் வனஸ்பதி, கோலா, ஐஸ் கிரீம், குளிர்பானம், கேக் கொழுப்பு மிகுந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவை உகந்ததல்ல என்கிறார் டாக்டர் திருத்தணிகாசலம்.
 
தண்ணீர் அதிகம் குடியுங்கள்:::
 
தண்ணீரில் இருப்பவை:
 
கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்பு கள், தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை. நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை, வெப்பத்தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப் பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான்.
 
கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து சோர்ந்து விடுவார்கள். தண்ணீரைக் குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெற்று, வேலைகளைச் செய்ய முடியும்.
 
நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. தினசரி கோடையில் குறைந்தது 3-4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறையக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம்.
 
ஒரு நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, ஒரேயடியாக நிறையத் தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டு பண்ணும்.
 
இயற்கைப் பழச்சாறுகள்::
 
அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லாப்பழங்களையும் சாப்பிடலாம்.
 
கோடையில் குளியல்::
 
ஒரு நாளைக்கு காலை, மாலை அல்லது இரவு, வேலைக்கு தகுந்தாற்போல் குளிக்கலாம். வியர்வை நாற்றும் போகும். ஒரு நாளைக்கு மேல் ஒரு உடை யைப் பயன்படுத்தக்கூடாது. கோடையில் உடையால் தொற்றுகள் பரவும். சொறி, சிரங்கு, அம்மை, அக்கி போன்ற தொந்தரவுகள் வரும்.
 
தனித்தனி சோப்புகள், ஷாம்புகள், சீப்புகள், துண்டுகள், கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். தன் சுகாதாரம், பொது சுகாதாரம் பராமரிக்க வேண்டும். இதனால் நோய் வரும் முன்னர் காக்கவும், வந்த பின்னர் போக்கவும், பிறருக்குக் குறிப்பாகத் குழந்தைகளுக்குத் தொற்றாமலும் காக்கலாம் என்கிறார் சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் திருத்தணி காசலம்.
 
சேர்த்துக் கொள்ள வேண்டியவை:::
 
அகத்திக்கீரை, தண்டுக் கீரை, முருங்கை, மனத் தக்காளி, டர்னிப் நூற்கோல், முள்ளங்கி, நீர்ப்பூசணி, முட்டைக்கோஸ், வாழைத் தண்டு, பீன்ஸ், கத்தரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கங் காய், வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய், வெங்காயம் நிறைய சேர்க்கலாம். பருப்பு வகைகளில் உளுந்து, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, வறுத்த கடலை, புழுங்கல் அரிசி, கோதுமை, ராகி ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.
 
அறவே தவிர்க்க வேண்டியவை:::
 
கோடையில் அதிக எண்ணெய், காரம், மசாலா, அதிகம் வறுத்தது, உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கொழுப்பு முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வெந்த உணவுகள் உகந்தது. வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகாது.
 
கோடைக்கால உடைகள்:::
 
ஆள் பாதி, ஆடை பாதி என்பதுபோல, கோடையில் அரைக்கை, காட்டன் சட்டை போட்டுக் கொள்ளலாம். காட்டன் ஆடைகளையும், உள்ளாடைகளையும் பயன்படுத்தலாம். பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
 
கடும் கோடையில் வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் ஆடைகளே மற்ற எல்லாவற்றையும் விட, உகந்ததாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளி ஒவ்வாமை அதாவது அலர்ஜி உள்ளவர்கள் தேவைக்கேற்ப ஆடைகளைப் பயன்படுத்தலாம்.        

பலன் தரும் மருத்துவ குறிப்புகள்


பலன் தரும் மருத்துவ குறிப்புகள்
பலன் தரும் குறிப்புகள்

*மயக்கத்துக்கு ஏலம்: ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் றி பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம்  உடனடியாக படிப்படியாக குறையும் .
 
*புளி: புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து நன்கு இடித்து எட்டு பங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் கூட உடனே ஆறும்.
 
* பாசிப்பயிறு: பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்று போட  பால்கட்டு குறைந்து வீக்கமும் படிப்படியாக குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறைய ஆரம்பிக்கும்.
 
*பசி உண்டாக: புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் இதை அருந்த பசி உண்டாகும். .
 
* புங்கன்: புங்கன் கொழுந்தை நன்கு அரைத்து நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை படுத்தல் தீரும்.
 
*அரிசிக் களிம்பு: முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து நன்கு அரைத்து கட்ட கட்டி கரையும்.

செல்போனை பயன்படுத்தும் முறைகள்


செல்போனை பயன்படுத்தும் முறைகள்
தற்போது எந்நேரமும் செல்போனும் கையுமாக (காதுமாக?) இருப்பவர்களை அதிகம் காண முடிகிறது. செல்போன்களையோ, ஐ-பாடுகளையோ அதிகம் பயன்படுத்தினால் கழுத்தில் வலி ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
 
`டெக்ஸ் நெக்' என்ற இந்தப் பாதிப்பு, செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அவர்கள். குனிந்து செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் அந்தத் தோற்றத்துக்கு ஏற்ப முதுகுத் தண்டுவட எலும்புகளும், தசைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
 
கழுத்து வளைவு, ஆதரவுத் தசைகள், மெல்லிய இணைப்புகளில் ஏற்படும் மாற்றம், கடைசியில் தசைகளில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். இன்றைய நவீன யுகத்தில் செல்போன் போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது என்றபோதும், அவற்றால் உடல்நலத்துக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
அதாவது கையில் உள்ள உபகரணத்தை நாம் பார்க்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தலையைக் குனிந்து செல்போனைக் கேட்கவோ, குறுந்தகவல்களைத் தட்டி அனுப்பவோ செய்யாமல் முகத்துக்கு நேராகப் பிடித்தபடி அவற்றைச் செய்ய வேண்டும். அதிக நேரம் தலை குனிந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 
அப்படியே இருந்தாலும் இடையிடையே கழுத்தை நிமிர்த்தி `ரிலாக்ஸ்' செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். கையடக்க எம்பி 3 பிளேயர், ஈ- ரீடர் எனப்படும் மின்னணு புத்தகம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
 
``சிற்சில மாற்றங்கள் மூலம் நீங்கள் உங்களின் ஆரோக்கியம், முதுகுத் தண்டுவடம், கழுத்து எலும்பு மற்றும் தசைகளின் ஆயுட்காலத்தைக் காத்துக்கொள்ளலாம்'' என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொதுவாக செல்போன் பித்தர்கள் தங்களை மறந்து அதில் மூழ்கிவிடுகிறார்கள். அவர்கள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் நல்லது!

எளிய மருத்துவம்

எளிய மருத்துவம்

 
*அகத்திக் கீரை சாறுடன் துவரம்பருப்பு 200 கிராம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் கண் எரிச்சல் படிப்படியாக குணமாகும்.
 
*அலர்ஜியால் தொடர்ந்து வரும் தும்மலின் தொல்லையை தவிர்க்க அகத்திக் கீரை சாறு,அகத்திப்பூ சாறு  இரண்டையும் சம அளவு எடுத்து அதில் தேன் கலந்து குடிக்கலாம்.
 
*காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்து வந்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
 
*அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்தால் சளிப் பிரச்சனை படிப்படியாக குணமாகும்.  

தேனின் மருத்துவ குணங்கள்


தேனின் மருத்துவ குணங்கள்

கண்: 
தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமல்
:
சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா:
அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.
 
இரத்த கொதிப்பு:
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும். 

இதயத்திற்கு டானிக்:
அனைஸ் பொடியுடன் (அஙூகூசூக் டச்ஞுக்ஷக்சு/வஹஙூசூச்ஞிஙூ டச்ஞுக்ஷக்சு) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.
 
தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
 1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது. 
 2.  தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும். 
 3.  வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். 
 4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. 
தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.  தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

7 Tips to Make Your Fat Belly Into a Flat Belly

7 Tips to Make Your Fat Belly Into a Flat Belly


You can make your fat belly into a flat belly quite naturally. No need of starving, no need of extreme diet control, no need of rigorous exercises and no need of slimming pills. These 7 tips will show you how.
How do you know you have a fat belly?
There are a few simple tests. Look at your belly – the area to the left or right of your belly button. Try to hold that area between your thumb and index finger. Can you hold it? You can not, if you have belly fat. The measure of a flat stomach is thickness of the two layers of flesh between your fingers should not be more than an inch.
Stand straight and hang a masons’ plumb rule, holding its line touching the middle of your chest and its bob reaching just above your feet. If the bob hangs freely without its line touching your belly, it is the indication of a flat stomach.
There is a much simpler test. When you take bath, look at yourself in the mirror. Are you happy with what you see? If you have a bulging stomach, you will definitely feel awkward and promise yourself to do something about it. But the problem is, once you get nicely dressed, you will forget about it and go back to your usual ways of bad living habits. Your dress hides most of your body defects.
How do you develop stomach bulge?
Some people believe that sleeping immediately after lunch causes bulging tummy. It is not true.
Reasons for stomach bulge:
 • Drinking water before and during food. People drink plenty of water before food to reduce the quantity of food intake. Some people drink water while eating food. In both cases, the water remains in the stomach along with food for a long time and causes stomach stretch.
 • Food rich in carbohydrates. Polished white rice, refined wheat products etc. are filled with carbohydrates and practically nothing else. Your body stores the extra carbohydrates in the form of fat.
 • Late night dinner. If you eat heavy late night dinner (10 P.M. or later) and sleep, there is no chance of burning all the calories as there is no physical activity. Most of the calories turn into fat.
 • Insufficient or no exercise. Present day automated world requires very little physical exercise in our daily work. We may just move our hands and feet. No movement for abdominal muscles. These muscles become loose and start stretching.
Fat gets stored in different places in men and women due the difference in sex hormones.  For women, fat gets stored in thighs, buttocks and hips. It is stored in the belly of men.
How do you turn your fat belly into flat belly?
 1. Drink water only when the stomach is empty. It prevents stretching of abdominal muscles. After drinking water, give a gap of half an hour before taking food. Similarly, drink water two hours after food. This has a number of other health benefits too.
 2. Remove high calorie food (refined rice, refined wheat etc., which are filled with carbohydrates) and empty calorie food (junk food) from your diet.
 3. Include plenty of vegetables and leafy greens in your diet. 75% of your food should consist of vegetables or leafy greens.
 4. No cooked food for breakfast. Eat only sprouted seeds. Include 3 or 4 varieties of seeds.
 5. No cooked food for dinner. Have two or three varieties of fruits with less calorie content. Examples: guava, pomegranate, papaya, orange, water melon.
 6. Finish your dinner between 6 P.M. and 7 P.M. No more food in solid or liquid form. If you feel hungry later, mix three spoonfuls of honey in a glass of water, squeeze half a lemon into it and drink. Honey gives instant energy.
 7. Practice Utthana padasana and Naukasana. These asanas (postures) help in reducing belly fat better than other conventional exercises.
With regular practice, these 7 tips will turn your fat belly into flat belly.

தொப்பை குறைய அன்னாசி பழம் சாப்பிடுங்கள்!!!!

தொப்பை குறைய அன்னாசி பழம் சாப்பிடுங்கள்!!!!

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். 
 
மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.

Wednesday, June 27, 2012

இங்கிலாந்து ஏ.டி.எம். எந்திரத்தில் கொட்டிய 2 மடங்கு பணம்


இங்கிலாந்து ஏ.டி.எம். எந்திரத்தில் கொட்டிய 2 மடங்கு பணம்
ஏ.டி.எம். எந்திரத்தில் 2 மடங்கு பணம்: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் டோட்டன் ஹாம் கேள்ட் சாலையில் சான்ஸ்பரி என்ற இடம் உள்ளது. இங்கு உடனுக்குடன் பணம் வழங்கும் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
 
இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் வாடிக்கையாளர் பணம் எடுத்தனர். அப்போது அவர்கள் கேட்ட பணத்தை விட 2 மடங்கு பணம் வந்தது. ஆனால் கணக்கு சீட்டிலோ அவர்கள் கேட்ட தொகைதான் பதிவாகி இருந்தது.
 
இதனால் மகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் கியூ வரிசையில் நின்று தங்களின் பணத்தை எடுத்தனர். மேலும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இது பற்றி தகவல் தெரிவித்தனர்.
 
இதனால், குறிப்பிட்ட அந்த ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் மட்டும் கூட்டம் அலைமோதியது. மக்கள் ஆர்வமாக பணம் எடுத்தால் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த மொத்த பணமும் சிறித நேரத்தில் காலியானது.
 
இதற்கிடையே, நேர்மை குணம் கொண்ட ஒரு வாடிக்கையாளர் இது குறித்து வங்கி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் அந்த எந்திரத்தின் தொழில் நுட்ப கோளாறை சரிசெய்து 2 மடங்கு பணம் வருவதை தடுத்தனர்.
 
இந்த தவறு வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டது. எனவே, வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்கள் இரட்டிப்பாக எடுத்த பணத்தை திரும்ப பெற முடியாது. ஏனெனில் எந்திரம் தந்த கணக்கு சீட்டில் அவர்கள் கேட்ட தொகைதான் பதிவாகி உள்ளது.

Tuesday, June 19, 2012

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்
கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.


அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Tuesday, June 12, 2012

விலாங்கு மீன்r

விலாங்கு மீன்விலாங்கு மீன் பற்றி இராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் விளக்கம் !!!!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். பார்ப்பதற்கு பாம்பைப் போலவே தோற்றமளிக்கும் கடல் விலாங்கு மீன்களின் சிறப்புகள் குறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த கடல் உயிரியலாளர் ர.செந்தில்குமார் கூறியது..

""மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகமாக வாழும் பல கடல் வாழ் உயிரினங்களில் ஒன்று கடல் விலாங்கு மீன். சுவை மிக்க மீன் வகையாக இருப்பதால் உலக அளவில் இதனை விரும்பி வேட்டையாடுகின்றனர்.ஆனால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் இவற்றைப் பிடிப்பதில்லை என்பதால் பவளப்பாறைகளின் இடுக்குகளில் இவை கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.
ஆங்குயில் பார்ம்ஸ் என்ற விலங்கியல் பெயரைக் கொண்ட இவ்வினங்களில் சுமார் 800 வகைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. குளங்களில் வாழும் விலாங்கு மீன்களைப் போலவே கடலில் வாழும் விலாங்கு மீன்களும் தோற்றமளிக்கின்றன. கடலில் வாழும் இவ்வினமோ சுமார் 5 செ.மீ முதல் 4 மீட்டர் வரை நீண்டதாகவும் பாம்புகளைப் போல உருவத்தை உடையதாகவும் இருக்கின்றன.

உருவத்தில் மிகவும் பெரியதாகவுள்ள முரே விலாங்கு மீனின் எடை சுமார் 25 கிலோ வரைகூட இருக்கும். இதன் முன் பகுதியிலும் வால் பகுதியிலும் துடுப்புகள் இருந்தாலும் அவையும் பக்கவாட்டில் இணைந்து ரிப்பன் போல வளைந்து உடலோடு உடலாக ஒட்டியிருக்கும்.இத்துடுப்புகளே விலாங்கு மீன்கள் இடம் பெயரவும் உதவியாக இருக்கின்றன.

ஆழமற்ற கடல் பகுதிகள், மணல், சகதி நிறைந்த இடங்கள், பாறைகள் மற்றும் பவளப்பாறைகளின் இடுக்குகளிலும் பொந்துகளிலும் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன. இவற்றில் சில வகைகள் மட்டும் கடலில் 13ஆயிரம் அடி வரையுள்ள ஆழத்திலும் வாழ்கின்றன. ஆங்குலிடே என்ற குடும்பத்தை சேர்ந்த விலாங்கு மீன் நல்ல தண்ணீரிலும் வாழும் தன்மையுடையது. முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கடலில் இருந்து ஆற்றுக்கு வந்து குஞ்சு பொரித்தவுடன் மீண்டும் கடலுக்குத் திரும்பிவிடும்.

இதன் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் கடலின் மேற்புறத்தில் மிதந்து கொண்டே பனித்துளிகளையும் கடல் நுரையையும் சாப்பிடும். பின்னர் கண்ணாடி போன்ற புழுவாக மாறி துள்ளிக் குதிக்கவும் நீந்தவும் கற்றுக் கொள்கின்றன. பின்னர் படிப்படியாக உருமாறி தாயைப் போலாகியவுடன் கடலின் அடிப்பகுதிக்குச் சென்றுவிடுகின்றன.

அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, நியுசிலாந்து, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, சுவீடன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த விலாங்கு மீன்களைக் கொண்டு சுவை மிக்க உணவுப் பதார்த்தங்கள் செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் சுவைக்காகவே சில நாடுகளில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதன் சுவைக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் அழிந்து வரும் உயிரின வகைகளில் சிவப்புப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.சிறுத்தை போன்ற புள்ளிகளையுடைய விலாங்கு மீன், முரே விலாங்கு மீன் ஆகியன கடலுக்குள் நீந்தி செல்லும் ஸ்கூபா டைவர்களை பயமுறுத்தும் மீன்களாகவும் இருக்கின்றன. இம்மீன்கள் நீளமாக இருப்பதால் உடலை வளைத்துக் கொண்டு குழிகளிலும், பாறைகளிலும் மறைந்திருந்தாலும் தலையை மட்டும் வெளியில் நீட்டி வாயை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கும்'' என்றார்.
Source:https://www.facebook.com/photo.php?fbid=253235078115333&set=a.240445996060908.44816.239983426107165&type=1&theater

சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!! Coccinia cordifolia


சர்க்கரை நோயை கட்டு படுத்தும் கோவைக்காய் !!! Coccinia cordifolia

 
நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய்.

நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க நாம் சாப்பிட வேண்டி உணவு பற்றி பார்க்கிறோம்.

சர்க்கரை நோயை கோவக்காய் கட்டுப்படுத்துகிறது :

கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

நீரிழிவு நோய்யை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளால் இதைக் கட்டுப் படுத்த முடியும்.சர்க்கரை நோய் கட்டுப் பாட்டுக்குள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாவிட்டால் அதைப் போன்ற ஆபத்தான நோய் வேறு எதுவுமில்லை.

நோயாளிகள் பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிக்கடி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது என்று சாப்பிட்ட பலர் கூறுகிறார்கள். ( ஆனால் அது ரொம்ப ரொம்ப கஷ்டம். சாப்பிடுவர்களை பார்த்தால் அவர்கள் முகம் எத்தனை கோணத்தில் போகும் என்று பார்ப்பவருக்கு மட்டும் தான் தெரியும்.இந்த நிலையில் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கோவைக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

ரகம்- 2 சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கோவைக்காய் பற்றி சில துளிகள்:

மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு.மற்றும் கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளுமே விருப்ப முடையதாகத்தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காயின் ச‌த்துக்க‌ள்:

வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.

கண்குளிர்ச்சியை உண்டாக்கும். இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும். கொவ்வங்காய் கோரோசனை மாத்திரை செய்யப் பயன்படுகிறது.நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

கோவக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.இக்காய் கொஞ்சாம் சூடு. அதனால் உதடு வெடிப்பு, வயிற்றுப் புண் ஏற்படும்.ஆனால் நாம் ( நீரிழிவு நோய்யாளிக‌ள் நீர் மோர், எலுமிச்சை சாறு என்று எடுத்துக் கொள்ளுவ‌தால் இந்த‌ சூடு அதிக‌ம் ஏற்ப்ப‌டாது.ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.முக்கியமா முற்றின கோவைக்காய் வாங்ககூடாது.

பிஞ்சு காயா பார்த்து வாங்கணும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.இக்காய்யை நீரிழிவு நோயாளிகள் மட்டும் அல்லாமல் எல்லோரும் சாப்பிடலாம்.

Source:https://www.facebook.com/pages/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/239983426107165

Ant & Grasshopper-OLD STORY v/s INDIAN VERSION


Ant & Grasshopper-OLD STORY v/s INDIAN VERSION 

An Old Story:

The Ant wrks hard in d withering heat all summer building its house and laying up supplies for the winter.

The Grasshopper thinks the Ant is a fool and laughs & dances & plays the summer away.

Come winter, the Ant is warm and well fed. The Grasshopper has no food or shelter so he dies out in the cold.


Indian Version:

The Ant works hard in the withering heat all summer building its house and laying up supplies for the winter.

The Grasshopper thinks the Ant's a fool and laughs & dances & plays the summer away.

Come winter, the shivering Grasshopper calls a press conference and demands to know why the Ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering Grasshopper next to a video of the Ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor Grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the Ant's house.

Medha Patkar goes on a fast along with other Grasshoppers demanding that Grasshoppers be relocated to warmer climates during winter .

Mayawati states this as `injustice' done on Minorities.

Amnesty International criticize the Indian Government for not upholding the fundamental rights of the Grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the Grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance) .

Opposition MPs stage a walkout. Left parties call for 'Bengal Bandh' in West Bengal and Kerala demanding a Judicial Enquiry.

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among Ants and Grasshoppers.

Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the 'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the ' Prevention of Terrorism Against Grasshoppers Act' [POTAGA], with effect from the beginning of the winter.

Arjun Singh makes 'Special Reservation ' for Grasshoppers in Educational Institutions & in Government Services.

The Ant is fined for failing to comply with POTAGA and having nothing left to pay his retroactive taxes,it's home is confiscated by the Government and handed over to the Grasshopper in a ceremony covered by NDTV.

Arundhati Roy calls it ' A Triumph of Justice'.

Lalu calls it 'Socialistic Justice '.

CPM calls it the ' Revolutionary Resurgence of the Downtrodden '

Govt invites the Grasshopper to address the UN General Assembly.

Many years later...

The Ant has since migrated to the US set up a multi-billion dollar company in Silicon Valley,

100s of Grasshoppers still die of starvation despite reservation somewhere in India,

..AND

As a result of loosing lot of hard working Ants and feeding the grasshoppers,

.
.
.
.
.
.
.
.
.
.

India is still a developing country !!!

Sunday, June 10, 2012

22 Reasons to go VEGETARIAN!!!!!


22 Reasons to go VEGETARIAN  !
Vegetarian food is easy to digest
Consider making this healthy choice as one of your new year's resolutions. ..
Stacks of studies confirm that a diet full of fresh fruits and vegetables and grains is your best bet for living a longer, healthier and more enjoyable life. There are literally hundreds of great reasons to switch to a plant-based diet; here are 22 of the best:
1        You'll live a lot longer. 
Vegetarians live about seven years longer, and vegans (who eat no animal products) about 15 years longer than meat eaters, according to a study from Loma Linda University. These findings are backed up by the China Health Project (the largest population study on diet and health to date), which found that Chinese people who eat the least amount of fat and animal products have the lowest risks of cancer, heart attack and other chronic degenerative diseases.
2        You'll save your heart.
Cardiovascular disease is still the number one killer in the United States, and the standard American diet (SAD) that's laden with saturated fat and cholesterol from meat and dairy is largely to blame. Plus, produce contains no saturated fat or cholesterol. Incidentally, cholesterol levels for vegetarians are 14 percent lower than meat eaters. 
3        You can put more money in your mutual fund. 
Replacing meat, chicken and fish with vegetables and fruits is estimated to cut food bills.
  

4        You'll reduce your risk of cancer. 
Studies done at the German Cancer Research Center in Heidelberg suggest that this is because vegetarians' immune systems are more effective in killing off tumour cells than meat eaters'. Studies have also found a plantbased diet helps protect against prostate, colon and skin cancers.

5        You'll add color to your plate.

Meat, chicken and fish tend to come in boring shades of brown and beige, but fruits and vegetables come in all colours of the rainbow. Diseasefighting phytochemicals are responsible for giving produce their rich, varied hues. So cooking by colour is a good way to ensure you re eating a variety of naturally occurring substances that boost immunity and prevent a range of illnesses.

6        You'll fit into your old jeans.
On average, vegetarians are slimmer than meat eaters, and when we diet, we keep the weight off up to seven years longer. That's because diets that are higher in vegetable proteins are much lower in fat and calories than the SAD. Vegetarians are also less likely to fall victim to weight-related disorders like heart disease, stroke and diabetes.

7        You'll give your body a spring cleaning.
Giving up meat helps purge the body of toxins (pesticides, environmental pollutants, preservatives) that overload our systems and cause illness. When people begin formal detoxification programs, their first step is to replace meats and dairy products with fruits and vegetables and juices.
 

8        You'll make a strong political statement. 
It's a wonderful thing to be able to finish a delicious meal, knowing that no beings have suffered to make it..
  
9        Your meals will taste delicious.
Vegetables are endlessly interesting to cook and a joy to eat. It's an ever-changing parade of flavours and colors and textures and tastes.

10    You'll help reduce waste and air pollution.

Livestock farms creates phenomenal amounts of waste. The tons of manure, a substance that's rated by the Environmental Protection Agency (EPA) as a top pollutants. And that's not even counting the methane gas released by goats, pigs and poultry (which contributes to the greenhouse effect); the ammonia gases from urine; poison gases that emanate from manure lagoons; toxic chemicals from pesticides; and exhaust from farm equipment used to raise feed for animals.

11       Your bones will last longer.
The average bone loss for a vegetarian woman at age 65 is 18 percent; for non-vegetarian women, it's double that. Researchers attribute this to the consumption of excess protein. Excess protein interferes with the absorption and retention of calcium and actually prompts the body to excrete calcium, laying the ground for the brittle bone disease osteoporosis. Animal proteins, including milk, make the blood acidic, and to balance that condition, the body pulls calcium from bones. So rather than rely on milk for calcium, vegetarians turn to dark green leafy vegetables, such as broccoli and legumes, which, calorie for calorie, are superior sources.

12      You'll help reduce famine.

It takes 15 pounds of feed to get one pound of meat. But if the grain were given directly to people, there'd be enough food to feed the entire planet. In addition, using land for animal agriculture is inefficient in terms of maximizing food production. According to the journal Soil and Water, one acre of land could produce 50,000 pounds of tomatoes, 40,000 pounds of potatoes, 30,000 pounds of carrots or just 250 pounds of beef.  
13      You'll avoid toxic chemicals.
The EPA estimates that nearly 95 per cent of pesticide residue in our diet comes from meat, fish and dairy products. Fish, in particular, contain carcinogens (PCBs, DDT) and heavy metals (mercury, arsenic; lead, cadmium) that cannot be removed through cooking or freezing. Meat and dairy products are also laced with steroids and hormones.

14      You'll protect yourself from foodborne illnesses.
According to the Center for Science in the Public Interest in the US, which has stringent food standards, 25 per cent of all chicken sold in the United States carries salmonella bacteria and, the CDC estimates, 70 percent to 90 percent of chickens contain the bacteria campy-lobacter (some strains of which are antibiotic-resistan t), approximately 5 percent of cows carry the lethal strain of E. coli O157:H7 (which causes virulent diseases and death), and 30 percent of pigs slaughtered each year for food are infected with toxoplasmosis (caused by parasites).

15      You may get rid of your back problems.

Back pain appears to begin, not in the back, but in the arteries. The degeneration of discs, for instance, which leads to nerves being pinched, starts with the arteries leading to the back. Eating a plant-based diet keeps these arteries clear of cholesterol- causing  blockages to help maintain a healthy back.

16      You'll be more 'regular.'
Eating a lot of vegetables necessarily means consuming fiber, which pushes waste out of the body. Meat contains no fibre. Studies done at Harvard and Brigham Women's Hospital found that people who ate a high-fiber diet had a 42 percent lower risk of diverticulitis. People who eat lower on the food chain also tend to have fewer incidences of constipation, hemorrhoids and spastic colon. 
 
17       You'll cool those hot flashes. 
Plants, grains and legumes contain phytoestrogens that are believed to balance fluctuating hormones, so vegetarian women tend to go through menopause with fewer complaints of sleep problems, hot flashes, fatigue, mood swings, weight gain, depression and a diminished sex drive.

18      You'll help to bring down the national debt.
We spend large amounts annually to treat the heart disease, cancer, obesity, and food poisoning that are byproducts of a diet heavy on animal products.

19      You'll preserve our fish population.
Because of our voracious appetite for fish, 39 per cent of the oceans' fish species are overharvested, and the Food & Agriculture Organization reports that 11 of 15 of the world's major fishing grounds have become depleted. 
20      You'll help protect the purity of water. 
It takes 2,500 gallons of water to produce one pound of mutton, but just 25 gallons of water to produce a pound of wheat. Not only is this wasteful, but it contributes to rampant water pollution.

21      You'll provide a great role model for your kids.
If you set a good example and feed your children good food, chances are they'll live a longer and healthier life. You're also providing a market for vegetarian products and making it more likely that they'll be available for the children.

22      Going vegetarian is easy!
Vegetarian cooking has never been so simple. We live in a country that has been vegetarian by default. Our traditional dishes are loaded with the goodness of vegetarian food. Switching over it very simple indeed.

Monday, June 4, 2012

பேப்பர் கப்(PAPER CUP) பயன்படுத்தாதீர்கள்...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...!ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...!


பேப்பர் கப்(PAPER CUP) பயன்படுத்தாதீர்கள் ...
 நண்பர் கரீம் கனி அவர்களின் முகப்பில் கண்ட தகவல் இது: ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது. அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.