Search This Blog

Sunday, May 6, 2012

Tamil Actresses Now and Then Pictures [Part-2]– தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-2]

Tamil Actresses Now and Then Pictures [Part-2]–
தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-2]
1980 மற்றும் 1990'களில் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதைகளாக இருந்த நடிகைகள் இன்று எப்படி இருக்கிறார்கள்? சில படங்கள் உங்களுக்காக...
1.Actress Madhavi/நடிகை மாதவி 
ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் திரை உலகை திரும்பி பார்க்க வைத்தவர்,பிகினி உடையில் பொருந்திய ஒரே தமிழ் நடிகை என்று புகழப்பட்டவர்.ரஜினி,கமல்,சிரஞ்சீவி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து கிளாமர் ஹீரோயின்களுக்கு எடுத்துக்காட்டாக திகழந்தவர். குறிப்பாக ரஜினியுடன் இவர் நடித்த விடுதலைப் படத்தில் (அந்த காலத்திலேயே) பிகினி -நீச்சலுடையில் வந்து கிளாமர் புரட்சி ஏற்படுத்தியவர். 
தற்போது திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் குடும்பத்துடன் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருகிறார்.தற்போது நடிகர் சிரஞ்சீவி தொடங்கிய பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் சேர்த்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
அன்று 


கணவருடன் 


2.Actress Seema/நடிகை சீமா 
ஒரு காலத்தில் திரை உலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர்.சக இயக்குனர் சசியை மணந்துக்கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயான இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அன்று

இன்று 
3.Actress Jayshree/நடிகை ஜெயஸ்ரீ
'தென்றலே என்னைத் தொடு' படத்தில் நாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், என மூன்று மொழிகளிலும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தவர் ஜெயஸ்ரீ.இவர் முன்னணியில் இருக்கும்போதே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானார் கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் இடையில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக
  கலந்து கொண்டார்.மேலும் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடிக்க இருக்கிறார்.


அன்றுஇன்று 
4.Actress Ramya Krishnan/நடிகை ரம்யா கிருஷ்ணன் 
பரத நாட்டியம் ,குச்சிபுடி ஆட்டத்தில் கை தேர்ந்த இவர் தனது 13- வது வயதில் சினிமாவிற்கு வந்தவர்.தமிழில் பெரிய அளவு வாய்ப்பு இல்லாத நிலையில் தெலுங்கு பட உலகம் கை கொடுக்க அங்கேயே செட்டில் ஆனவருக்கு,திருப்பு முனையாக அமைந்த படம் படையப்பா.
அம்மன் வேட நடிப்பிலிருந்து கேஆர் விஜயா ரிட்டயரான பிறகு, அந்த இடத்தை பலமாகப் பிடித்துக் கொண்டவர்,இயக்குனர் கிருஷ்ணவம்சியை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தாயானார்.தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அன்று
இன்று 


5.Actress Revathy/நடிகை ரேவதி 
சிறந்த நடிகைகளின் வரிசையில் ரேவதிக்கு ஒரு தனி இடம் உள்ளது என்பது சொல்லித் தெரிய அவசியமில்லை. நடனம், பாட்டு, நடிப்பு என்று இவரது திறமை முடிந்து விடாமல் தயாரிப்பு இயக்கம் என்று இன்னும் தனது மறுபக்கத்தை உயர்த்திக் கொண்டிருப்பவர்.
இயக்குனர் சுரேஷ் மேனனை திருமணம் காதலித்து திருமணம் செய்தார்.பின்னர் இருவருக்கும் பிரச்சனை வரவே பரஸ்பரம் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.இப்போது தனியாகவே வாழ்ந்து வருகிறார்.
அன்று
இன்று 6.Actress Gawthami/நடிகை கௌதமி 
இவரது இயற்பெயர் "கௌதமி டடிமல்லா".முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்டு வந்த இவர் 1998'இல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து செட்டிலானார்.ஆனால் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே அவர்களுக்கு பிரச்சனை வர விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.நடுவில் மார்பக புற்றுநோயால் அவதி பட்ட இவருக்கு ஆறுதலாக இருந்தவர் நடிகர் கமல்.கமல்-சரிகா ஜோடிசில கருத்து வேறுபாடுகளால் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில் தற்போது கமல் மற்றும் அவரது மகள்களை நடிகை கௌதமி பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு முதல் திருமணம் மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அன்று

இன்று 
7.Actress Madhubala/நடிகை மதுபாலா  
இவரது முழுப்பெயர் "மதுபாலா ரகுநாத்".தமிழில் ரோஜா, ஜென்டில் மேன், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட படங்களில் நடித்த மதுபாலா, திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இவர் நடிகை ஹேமமாலினியின் உறவினர் ஆவார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டி.வி., சீரியலில் நடிக்க வந்துள்ளார், மதுபாலா.
அன்று
இன்று 8.Actress Roja/நடிகை ரோஜா 
இவரது இயற்பெயர் "லதா ரெட்டி"ரோஜா அறிமுகமான "செம்பருத்தி" படத்தின் படப்பிடிப்பின் போதே அவருக்கும் அப்படத்தின் இயக்குனரானசெல்வமணிக்கும் இடையே காதல் அரும்பத் தொடங்கியது.
செக்மோசடி வழக்குகள் தொடர்பாக அடிக்கடி ரோஜா நீதிமன்றத்திற்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்.
இந்தத் தொல்லைகள் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கும் முயன்றார் ரோஜா. மற்றொரு முறை நீதிமன்றஉத்தரவின் படி குழந்தைகள் மனநலக் காப்பகத்தில் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டார் அவர்.திருமணம் முடித்து இரு குழந்தைகளுக்கு தாயான இவர்
அரசியலில் நுழைந்தவுடன் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கிறார். 
அன்று


இன்று 9.Actress Meena/நடிகை மீனா 

இவரது முழுப்பெயர் "மீனா துரைராஜ்".குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தனது அழகாலும்,நடிப்பாலும் ரசிகர்களை கிறங்கடித்தார்.வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரையில் நடித்தவர்,திருமணம் செய்துக்கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயான இவர் மீண்டும் நடிக்க போவதாக செய்திகள் வந்துக்கொண்டிருக்கிறது.
அன்று

இன்று 

10.Actress Aishwarya/நடிகை ஐசுவர்யா
இவர் பிரபல நடிகை லட்சுமியின் மகள்.இவரது இயற்பெயர் "சாந்த மீனா".தாயை போல் திரை உலகில் ஜொலிக்க முடியாத இவர் தாயை போலவே இரு முறை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர்.தனது கணவர் மறுமணம் செய்தபோது நேரில் சென்று வாழ்த்தி பரபரப்பு ஏற்படுத்தியவர்.துணிச்சலான நடிகை என்ற பெயர் இவருக்கு உண்டு.சில காலம் பிரச்சனை ஏற்பட்டு தாயை பிரிந்து வாழ்ந்த இவர் தற்போது தந்து தாயுடன் மீண்டும் சேர்ந்துள்ளார்.நடிகை லட்சுமி 3 முறை திருமணம் ஆனவர்.முதல் திருமணம் மூலம் பிறந்தவர் தான் ஐஸ்வர்யா.
அன்றுஇன்று 

No comments: