Search This Blog

Monday, May 21, 2012

Tamil Actresses Now and Then Pictures [Part-6]– தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-6]

Tamil Actresses Now and Then Pictures [Part-6]–  தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-6]

1.Actress Seetha/நடிகை சீதா 
`ஆண்பாவம்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சீதா. தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.பார்த்திபன் கதாநாயகனாக நடித்து முதன்முதலாக டைரக்டு செய்த `புதிய பாதை’ படத்தில், சீதா கதாநாயகியாக நடித்தார். அப்போது சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதனால் சீதா வீட்டைவிட்டு வெளியேறினார். சீதாவும், பார்த்திபனும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடைபெற்றது. சீதா-பார்த்திபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த சில வருடங்களிலேயே சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இருவரும் குடும்ப நல கோர்ட்டு மூலம் விவாகரத்து செய்து கொண்டார்கள். விவாகரத்துக்குப்பின், சீதா பெற்றோர்களுடன் வாழ்ந்தார். அவருடன் மூத்த மகள் அபிநயா மட்டும் இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், வளர்ப்பு மகன் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனிடம் இருக்கிறார்கள். கதாநாயகி வாய்ப்பு போன பின் சீதா டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சீதாவுக்கும், டி.வி. நடிகர் சதீசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினார்கள். கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள், முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.
அதன்படி சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அன்று 
இன்று 
acteres seetha,sathis,abinaya
 2.Actress Suvalakshmi/நடிகை சுவலட்சுமி 
இந்தியாவின் தலைசிறந்த சினிமா படைப்பாளியான சத்யஜித்ரேவினால் வங்காள மொழிப்படமான ‘உத்ரோன்’-ல் நடிகையாக அறிமுகப் படுத்தப்பட்டு, தமிழில் ஆசை படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுவலட்சுமி. தமிழில் கவர்ச்சி காட்டாமல் ஹீரோயினாக நடித்த சில நடிகைகளில் இவரும் ஒருவர். தொடர்ந்து முன்னணி இளம் நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்,ஆனால் அதிக படங்களில் நடிக்கவில்லை.
நடித்தபோதே தபால் மூலம் சட்டம் படித்து வந்த சுவலட்சுமி படிப்பை முடித்தவுடன் சத்தம் போடாமல் சுவாகதோ பானர்ஜியை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.இவர் ஒரு பெண் குழந்தைக்கு தாய். அமெரிக்காவில் குடும்பம் நடத்தி வரும் சுவலட்சுமியை பலரும் அக்கா, அம்மா வேடத்தில் நடிக்க அணுகினர். ஆனால் எல்லோருக்கும் சாரி சொல்லி விட்டார் சுவா. டிவி தொடர்களில் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறி விட்டார்.
அன்று 
இன்று 
3.Actress Sangeetha/நடிகை சங்கீதா  
பல திரைப்படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்தவர் சங்கீதா.ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு திற உலகை விட்டு விலகினார்.இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.தற்போது கணவர் இயக்கம் திரை படங்களில் கணவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

அன்று 
கணவர் சக்தி சரவணன் 

4.Actress 'Uyir'Sangeetha[Rasika]/நடிகை 'உயிர்'சங்கீதா[ரசிகா]
நடிகை சங்கீதா ஆரம்பத்தில் ரசிகா என்ற பெயரில் நடித்துக் கொண்டிருந்தார்இவரது இயற்பெயர் "சங்கு ராமன்".தமிழில் போதிய வைப்பு இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.பின்னர் சங்கீதா என்று பெயரை மாற்றிக்கொண்டு இவர் நடித்த உயிர் திருப்பு முனையாக அமைய மீண்டும் பிசி நடிகை.பாடகர் கிரிஷை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அன்று 
இன்று 

5.Actress Neena/நடிகை நீனா
'கேளடி கண்மணி' மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கண்ணாத்தாள்,விடுகதை போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை நீனா,வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார்.இங்கு இவர் நடித்த சித்தி தொடர் மூலம் பிரபலமானார்.பின்னர் திருமணம் செய்து விட்டு நடிப்பை விட்டு விலகி கணவருடன் செட்டிலாகி விட்டார்.இப்போது என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

அன்று 
6.Actress Anju/நடிகை அஞ்சு 
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக பல படங்களில் நடித்த இவர் வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார்.ரஜினிகாந்தின் 'பொல்லாதவன்' படத்தில் அவர் மகள் சோபாவாக நடித்தது இவர் தான்.
அன்று 
இன்று 

7.Actress Saranya Ponvannan/நடிகை சரண்யா பொன்வண்ணன் 
 மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.சரண்யா சக நடிகரான பொன் வண்ணனைத் காதல் திருமணம் புரிந்துள்ளார்.தற்போது ''தென்மேற்கு பருவக்காற்று'' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

அன்று
 
இன்று 
8.Actress Saritha/நடிகை சரிதா 
மௌன கீதங்கள்', 'ஊமை விழிகள்', 'கல்யாண அகதிகள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'சுஜாதா', 'மரோசரித்ரா', போன்ற படங்களில் நடித்த நடிகை சரிதாவின் நடிப்பு மறக்க முடியாதது.மலையாள நடிகர் முகேஷை காதலித்து திருமணம் செய்தது இரு குழந்தைகளுக்கு தாயான இவர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்தார்.தொடர்ந்து திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
அன்று 
இன்று 

9.Actress Sanghavi/நடிகை சங்கவி 
அமராவதி என்னும் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சங்கவி. இவரது இயற்பெயர் "காவ்யா ரமேஷ்" ஒருகாலத்தில் விஜய்யின் ஆஸ்தான நடிகையாக திகழ்ந்தவர் சங்கவி தான். விஜய்யுடன் ரசிகன், விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வாய்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையில் நடிக்க தொடங்கிய இவர் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகியும் திருமணம் செய்யாமல் இருந்து வந்தார்வெகு நாட்களாக மாப்பிள்ளை தேடி வந்த நிலையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த டாக்டரை திருமணம் செய்ய இருப்பதாகவும்,தற்போது ஓரிரு படங்களில் நடித்து வரும் சங்கவி, திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு, கணவருடன் அமெரிக்காவில் போய் செட்டிலாக முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளி ஆகி உள்ளது.


அன்று 
இன்று 
10.Actress Mohini/நடிகை மோகினி
ஈரமான ரோஜாவே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மோகினி. முதல் படம் ஹிட் ஆனதால் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் போகப் போக வாய்ப்புகள் மங்கவே 2003ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.ஆனால் இந்தத் திருமணம் ஐந்து ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. சமீபத்தில் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர்.இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்த நிலையில் மோகினியும், அவரது கணவரும் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாததால், இவர்களது விவாகரத்து வழக்கை சென்னை குடும்பநல கோர்ட்டு தள்ளுபடி செய்தது.இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அன்று 
http://spicyhotsexyactress.blogspot.com/
இன்று 

No comments: