Search This Blog

Sunday, May 13, 2012

Tamil Actresses Now and Then Pictures [Part-5]– தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-5]


Tamil Actresses Now and Then Pictures [Part-5]–
 தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-5]
தமிழ் சினிமாவில் சில காலத்திற்கு முன் கொடிகட்டிப்பறந்த கதாநாயகிகள் இவர்கள்...இப்போது எப்படி இருக்கிறார்கள்?சில படங்கள் உங்களுக்காக...
1.Actress Shalini /நடிகை ஷாலினி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி,பின்னர் கதாநாயகியாக சிறிது காலம் நடித்த இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே  அமர்க்களம் படத்தில் நடித்த போது சக நடிகர் அஜீத்தை காதலித்து மணந்தார்.திருமணதிற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய இவர் கணவர் மற்றும் குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 
அன்று 
 இன்று 
2.Actress Kanaka/நடிகை கனகா 
பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர் கரகாட்டக்காரன் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து `அதிசய பிறவி', `கும்பக்கரை தங்கய்யா', `கட்டப் பஞ்சாயத்து', `பெரிய வீட்டு பண்ணைக்காரன்' உள்பட பல படங்களில் குறுகிய காலத்தில் அனைத்து கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.அமெரிக்காவை சேர்ந்த என்ஜினியரை ரகசியமாக திருமணம் செய்து செட்டிலானார்.திருமணதிற்கு முன்பே இவர் நடிப்பை நிறுத்தி விட்டார். அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்தது.இந்த நிலையில்,2010'ம் ஆண்டு நடிகை கனகா திடீரென்று தனது கணவரை காணவில்லை என்று புகார் குடுத்து பரபரப்பை கிளப்பினார்.அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.
அன்று 
Tamil Film Actress Kanaka Hot Pictures 4

 இன்று 

3.Actress Abirami/நடிகை அபிராமி 
தமிழ் சினிமாவில் சிறிது காலம் கமல்,அர்ஜூன்,சரத்குமார்,பிரபு  போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்த அபிராமி வாய்ப்புகள் குறைந்ததும் அமெரிக்காவில் வேலை தேடிக்கொண்டு செட்டிலானார்.இடையில் ஒரு சின்னத்திரை நிகழ்ச்சியில் மட்டும் கலந்துக்கொண்டார்.[நிகழ்ச்சியில் சற்றே குண்டடித்து குட்டையாக வெட்டப்பட்ட தலை முடியுடன் காணப்பட்டார்]
இவரது தற்போதைய படங்கள் கிடைக்கப்பெறவில்லை.
அன்று
 


4.Actress Nagma /நடிகை நக்மா
தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வெற்றிகரமான நடிகையாக வளம் வந்தவர் நக்மா.இவரது முழுப்பெயர் "நக்மா சதானா"/"நந்திதா அர்விந்த் மொரார்ஜி".தமிழில் வாய்ப்புகள் குறைந்தபோது சில காலம் போஜ்பூரி படங்களில் நடித்தார்.தற்போது சினிமாவை விட்டு முற்றிலும் விலகி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி ஜெபக்கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார்.
அன்று
 இன்று 
4.Actress Ravali /நடிகை ரவளி 
சினிமாவில் நடிக்க தொடங்கி 10 வருடங்களில் வெறும் 15 படங்களில் மட்டுமே நடித்த இவர் 2007'இல் நீல் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகினார்.தற்போது தனது கணவர் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.
அன்று
 இன்று 
5.Actress Radhika Choudhry /நடிகை ராதிகா சௌத்ரி 
சில படங்களில் மட்டும் நடித்த இவர் நடிப்பில் பெரிய அளவு வெற்றி பெறவில்லை.வாய்ப்புகள் குறைந்த பிறகு காணாமல் போன இவர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்து குறும்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்.அதுவும் இங்கல்ல லாஸ் ஏஞ்சலிசில்,அவரது முதல் படத்திற்கு சிறந்த படத்திற்கான சில்வர் ஏஸ் அவார்ட் வாங்கியுள்ளார்.
அன்று

 இன்று 

6.Actress Rakshita/நடிகை ரக்ஷிதா 
சிம்புவுடன் சாணக்யா சாணக்யா என்று ஆட்டம் போட்ட இவரை ரசிகர்கள் மறந்திருக்க வாய்.இவரது இயற்பெயர் "ஸ்வேதா".பிசியாக இருக்கும்போதே கன்னட பட டைரக்டர் பிரேமை காதலித்து மணந்து ஒரு குழந்தைக்கு தாயான இவர் தற்போது கணவருடன் கர்நாடகாவில் வசித்து வருகிறார்.
அன்று
 இன்று 
7.Actress Easwari Rao/நடிகை ஈஸ்வரி ராவ் 
சினிமாவில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற இயலாத இவர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.அவ்வபோது பெரிய திரையில் அக்கா,அண்ணி வேடங்களில் தலை காட்டுகிறார்.
அன்று

 இன்று 
8.Actress Rajasree/நடிகை கருத்தம்மா ராஜஸ்ரீ 
கருத்தம்மா படத்தில் அறிமுகமாகி ஒன்றிரண்டு படத்தில் கதாநாயகியாக நடித்தவர்,வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துக்கொண்டு சின்னத்திரை பக்கம் செட்டிலாகிவிட்டார்.அவ்வபோது பெரிய திரையில் அக்கா,அண்ணி வேடங்களில் தலை காட்டுகிறார்.
அன்று இன்று 

9.Actress Roshini Sadanah/நடிகை ரோஷினி சதானா[ராதிகா]
நடிகைகள் நக்மா,ஜோதிகாவின் சகோதரியான இவர் அவர்களை போலவே சினிமாவில் அறிமுகம் ஆனார்.ஆனால் அவர்களை போல் திரையில் ஜொலிக்க இயலவில்லை.தற்போது திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார்.
அன்று

இன்று 
10.Actress Prema/நடிகை பிரேமா
இவரை நினைவில்லாதவர்கள் இவர் நடித்த பக்தி படங்களை நினைத்துப்பாருங்கள்.கன்னட நடிகையான இவர் தமிழில் சில படங்களில் நடித்தார்.தற்போது திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகி கணவருடன் வாழ்ந்து வருகிறார்.
அன்று

இன்று
 

1 comment:

Anonymous said...

well paul this is there site info , there very helpfull ,just say leatensy give you there number