Search This Blog

Monday, May 7, 2012

Tamil Actresses Now and Then Pictures [Part-4]– தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-4]

Tamil Actresses Now and Then Pictures [Part-4]–

தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-4]
தமிழ் சினிமாவில் சில காலத்திற்கு முன் கொடிகட்டிப்பறந்த கதாநாயகிகள் இவர்கள்...இப்போது எப்படி இருக்கிறார்கள்,என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

1.Actress Simran/நடிகை சிம்ரன் 

அன்று 
தமிழ் சினிமாவில் அதிக காலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் தூக்கத்தை கலைத்த இவரின் உண்மையான பெயர் "ரிஷிபாலா நவ்வால்".நடிகர்கள் ராஜூ சுந்தரதுடனான காதல் கை கூடும் வேளையில் யார் கண் பட்டதோ இருவரும் பிரிந்தனர்,பின்னர் நடிகர் கமலுடன் இணைத்து கிசிகிசுக்கப்பட்டார்.இதனால் கமழும் சரிகாவும் விவாகரத்து பெற்றனர்."இடுப்பழகி" என்று ரசிகர்களால் புகழப்பட்ட இவர் முன்னணியில் இருக்கும்போதே திடீரென்று குடும்ப நண்பரான தீபக்கை திருமணம் செய்து செட்டிலானார்.இரு குழந்தைகளுக்கு தாயான பின் சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் இவர் தற்போதும் நடித்து வருகிறார்.

இன்று 

2.Actress Jyothika/நடிகை ஜோதிகா 

அன்று 
தமிழ் சினிமாவில் நக்மாவின் தங்கை என்ற அறிமுகத்தோடு நடிக்க தொடங்கிய இவர்,குறுகிய காலத்தில் தனது குறும்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.இவரது இயற்பெயர் "ஜோதிகா சதானா".அக்கா நக்மா பத்து வருடம் சினிமாவில் தாக்குப்பிடித்தார் இவரால் ஐந்து வருடமாவது தாக்குபிடிக்க முடியுமா என்றெல்லாம் பல கேள்விகள் எழும்பியது.அதையெல்லாம் பொய்யாக்கி நக்மாவை மிஞ்சும் வகையில் பெயரும் புகழும் பெற்றார்.தன்னுடன் பல படங்களில் நடித்த சக நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்த இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி கணவர் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது சில பொது நிகழ்ச்சிகளிலும் தனது கணவர் நடத்தி வரும் அகரம் நிறுவனம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும்,சில விளம்பரங்களிலும் பங்கேற்று வருகிறார்.


இன்று 
3.Actress Devayani/நடிகை தேவயானி  

அன்று 
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ந்த இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.கொஞ்சி கொஞ்சி பேசி குடும்பபாங்கான வேடங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த இவரது இயற்பெயர் "சுஷ்மா ஜெயதேவ்".தனது படங்களில் இயக்குனாராக பணிபுரிந்த ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான இவர்,தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.தனது வெற்றிப்படமான காதல்கோட்டை என்ற பெயரையே தனது புது வீட்டிற்கும் சூட்டியுள்ளார்.
இன்று 
4.Actress Rambha/நடிகை ரம்பா 

அன்று 
தமிழ் சினிமாவில் இவரை அவ்வளவு யாரும் மறந்து விட முடியாது."தொடையழகி" என்று ரசிகர்களால் புகழப்பட்ட இவரது இயற்பெயர்  
"விஜயலட்சுமி".சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததும் வெளிநாட்டு தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலானார்.ஒரு குழந்தைக்கு தாயான இவர் அடிக்கடி சென்னை வந்து தன குடும்பத்தினரை பார்த்து செல்கிறார்.
இன்று 
5.Actress Laila/நடிகை லைலா 

அன்று 

"சிரிப்பழகி" என்று ரசிகர்களால் புகழப்பட்ட சிறிது காலத்திலேயே அணைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்து புகழ் பெற்றார்.முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஈரானை சேர்ந்த தனது ஏழு வருட காதலனை திருமணம் செய்தார்.ஒரு குழந்தைக்கு தாயான இவர் சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இன்று 
6.Actress Maalavika/நடிகை மாளவிகா 

அன்று 
தமிழ் சினிமாவை தனது கவர்ச்சியால் கிறங்கடித்த இவரது இயற்பெயர் "ஸ்வேதா கொன்னுர்".பொதுவாக திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்து விடும்,இவர் விஷயத்திலோ திருமணதிற்கு பின்னர் வாய்ப்பு மழை கொட்டியது.காரணம் இவர் காட்டிய கவர்ச்சி. கர்ப்பமானதும் திரையை விட்டு விலகிய இவர் தற்போது இரு குழந்தைகளுக்கு தாய்.தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் இவர் எப்போது வேண்டுமானாலும் மறுபிரவேசம் செய்யலாம்.
இன்று 
7.Actress Manthra/நடிகை மந்த்ரா 

அன்று 
சினிமாவில் சிறிது காலமே பிரகாசித்த மந்த்ரா தனது அதீத கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்தவர்.மற்ற மொழிப்படங்களில் "ரஸ்சி" என்று அழைக்கப்படும் இவர் வாய்ப்புகள் குறைந்த பின்னர் தெலுங்கு திரைப்பக்கம் ஒதுங்கி ஒரு இயக்குனரை ரகசியமாக காதலித்து மணந்தார்.தற்போது அக்கா,அண்ணி வேடங்களில் மறுபிரவேசம் செய்ய வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.
இன்று 
8.Actress Priyanka Trivedi/
நடிகை பிரியங்கா திரிவேதி 

அன்று 
 தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் இவர் கன்னட படத்தில் நடித்தபோது சக நடிகர் உபேந்த்ராவை காதல் மணம் புரிந்தார்.திருமணதிற்கு பின் சினிமாவை விட்டு விலகிய இவர் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இன்று 
9.Actress Uma/நடிகை உமா 

அன்று 
நடிகை சுமித்ராவின் மகளான இவர் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.நடிக்க தொடங்கிய சிறிது காலத்திலேயே திருமணம் செய்து கணவருடன் செட்டிலாகி விட்டார்.இவரது இயற்பெயர் "உமா சங்கரி ராஜேந்திர பாபு".
இன்று 
10.Actress Swathi/நடிகை சுவாதி 

அன்று 
தமிழில் சில படங்களில் மட்டும் நடித்திருக்கும் இவர் தற்போது கிரண் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.திருமணதிற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர் இப்போது என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இன்று 

No comments: