Search This Blog

Sunday, May 6, 2012

Tamil Actresses Now and Then Pictures [Part-3]– தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-3]


Tamil Actresses Now and Then Pictures [Part-3]–
தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-3]
1980 மற்றும் 1990'களில் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதைகளாக இருந்த நடிகைகள் இன்று எப்படி இருக்கிறார்கள்? சில படங்கள் உங்களுக்காக...
1.Actress Nadhiya/நடிகை நதியா 
ஃபாசில் இயக்கிய 'பூவே பூச்சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா.இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு.திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் பதினைந்து வருட இடைவெளிக்குப் பின் ஜெயம் ரவிக்கு அம்மாவாக 'எம் குமரன் S/o மகாலட்சுமி', விஷாலின் அத்தையாக 'தாமிரபரணி' போன்ற படங்களில் நடித்தார்.தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
அன்று 
இன்று 
2.Actress Nirosha/நடிகை நிரோஷா 
கமல்,கார்த்திக் மற்றும் ராம்கியுடன் பல படங்களில் நடித்தவர்.பழம்பெரு நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும் பிரபல நடிகர் ராதாரவி,ராதிகாவின் சகோதரியுமான இவர் சக நடிகர் ராம்கியை காதலித்து மணந்தார்.திருமணதிற்கு பின் நடிக்காமல் இருந்த இவர் இப்போது மறுபடியும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.இவருக்கு குழந்தைகள் இல்லை.
அன்று 

இன்று 
3.Actress Kasthuri/நடிகை கஸ்தூரி 
1992ல் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்று, மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்து, "ஆத்தா உன் கோயிலிலே" படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் நடிகை கஸ்தூரி.இவரது இயற்பெயர் "ஷன்மதி".வாய்ப்புகள் குறைந்ததும் திருமணம் செய்து செட்டிலான இவர் தற்போது மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார்.
அன்று 

இன்று 
4.Actress Suganya/நடிகை சுகன்யா 
பிரபு,சத்யராஜ் ஈன்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமான இவர் சிறந்த பரத நாட்டிய கலைஞரும் கூட.
நடிகை சுகன்யாவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த, அமெரிக்க குடியுரிமை பெற்றவரான ஸ்ரீதரன் என்பவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள பாலாஜிகோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
கல்யாணம் ஆன கையோடு கணவருடன் குடித்தனத்தை ஆரம்பித்த சுகன்யா 2003ம் ஆண்டே சென்னை திரும்பினார். வந்தவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.விவாகரத்தில் முடிந்த இந்த திருமணத்தை தொடர்ந்து நடனம் நடிப்பு என்று சுகன்யா பிசியாகவே இருக்கிறார்.
அன்று 
இன்று 

5.Actress Sivanranjani/நடிகை சிவரஞ்சனி 

தமிழ் படத்தில் முதல் பூனைக் கண் அழகி என பெயர் பெற்ற சிவரஞ்சனி பெரிய அளவில் புகழ் பெறவில்லை,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தை காதல் மனம் புரிந்த இவர் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிற,தயாரிப்பாளராக.கணவரும் தெலுங்கு நடிகருமான ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார்.
அன்று 

இன்று 
6.Actress Suhasini/நடிகை சுகாசினி 
நடிகர் சாருஹாசனின் மகள் தான் சுகாசினி,அதாவது நடிகர் கமல்  ஹாசன் இவருக்கு சித்தப்பா.'நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் இயக்குனர் மணிரத்னத்தை காதலித்து மணந்து ஒரு குழந்தைக்கும் தாயானார்.தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார்.
அன்று 

இன்று
 
7.Actress Rohini/நடிகை ரோகிணி 
இவர் நடிகர் ரகுவரனை காதலித்து திருமணம் செய்து ஒரு குழந்தைக்கும் தாயானார்.கருத்து வேறு பாடால் விவாகரத்து செய்து பிரிந்த இவர்,தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்கதாநாயகி,குணச்சித்திர நடிகை, நடனமாடுபவர், சின்னத்திரை பிரபலம் இப்படி எல்லா அவதாரங்களும் எடுத்து கடைசியாக பாடலாசிரியராக உருவெடுத்து தற்போது ஒரு படத்திற்கு கதை வசனம் எழுதிக்கொண்டுள்ளார்.
அன்று 

இன்று
8.Actress Maheshwari/நடிகை மகேஸ்வரி 
பாரதிராஜாவின் கருத்தம்மா படம் மூலம் அறிமுகமானவர் நடிகை மகேஸ்வரி. இவர் நடிகை ஸ்ரீ தேவியின் சித்தி மகள்.உல்லாசம்', , "நேசம்' போன்ற படங்களில் நாயகியாக நடித்த மகேஸ்வரிக்கு சினிமா செட் ஆகவில்லை. திருமணதிற்கு பின் சில காலம் கலைச்சேவைக்கு லீவு விட்டிருந்த அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக துவங்கிவுள்ள "மை நேம் இஸ் மங்கம்மா' என்ற தொடரின் நாயகியாக நடிக்கிறார்.
அன்று 

இன்று

9.Actress Sripriya/நடிகை ஸ்ரீபிரியா 
1980 மற்றும் 1990 களில் மிகவும் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஸ்ரீபிரியா.முன்னணியில் இருக்கும்போதே திர்மானம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான இவர் இப்போது நடித்து கொண்டு தான் இருக்கிறார்.
அன்று 

இன்று
10.Actress Nalini/நடிகை நளினி 
1987-ம் ஆண்டில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை நளினி. அப்போது ராமராஜன் உதவி இயக்குனராக இருந்தார்.அப்போது நடிகர் ராமராஜனுக்கும், நளினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த ராமராஜன் - நளினி இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நளினிக்கு ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.ராமராஜன் - நளினி வாழ்க்கையில் விதி விளையாடியது. இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பிரிந்து விடுவது என்று முடிவு எடுத்தனர். 13 வருட  திருமண வாழ்க்கைக்கு பின் கோர்ட்டு மூலம், விவாகரத்து பெற்று பிரிந்தனர்.'திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்த நளினி மீண்டும் அரிதாரம் பூச ஆசைப்பட்டது தான் மணமுறிவுக்கு காரணம் என்று ராமராஜன் தெரிவித்தார்.தற்போது நளினி குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அன்று 

இன்று

No comments: