Search This Blog

Sunday, May 6, 2012

Tamil Actresses Now and Then Pictures [Part-1] -தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள் [பகுதி-1]

Tamil Actresses Now and Then Pictures [Part-1]–
தமிழ் நடிகைகள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-1]
1980 மற்றும் 1990'களில் தமிழ் ரசிகர்களின் கனவு தேவதைகளாக இருந்த நடிகைகள் இன்று எப்படி இருக்கிறார்கள்? சில படங்கள் உங்களுக்காக...
1.Actress Kushboo/நடிகை குஷ்பூ 
 இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.இவரது இயற்பெயர் "நகத் கான்".தமிழ்,மலையாளம்,தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும்  முன்னணி கதாநாயகியாக கோடி கட்டி பரந்த இவருக்கு உலகில் எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு அவ்வளவு ரசிகர்கள்.அதிலும் தமிழ் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் கோவிலே கட்டி விட்டார்கள்.இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் இயக்குனர் சுந்தரை காதல் மணம் புரிந்து இரு குழந்தைகளுக்கு தாய்.தற்போதும் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் இவர்,அரசியலிலும் குதித்து இருக்கிறார்.
அன்று 

இன்று

2.Actress  Sridevi/நடிகை ஸ்ரீதேவி
இவரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா என்ன?தமிழ்,மலையாளம்,தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டையே கலக்கினவர்.இவரது இயற்பெயர் "ஸ்ரீ அம்மா யான்கர்".கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் ரஜினி,கமல் என்று அனைத்து முன்னணி நாயகர்களுடனும் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி ஆனார்.ஹிந்தி படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் போனி கபூருக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது,போனி ஏற்கனவே திருமணம் ஆனவர்.முதல் மனைவியை விவாகரத்து செய்த கையோடு ஸ்ரீதேவியை மணமுடித்தார் போனி.இரு குழந்தைகளுக்கு தாயான இவர் தற்போது சின்னத்திரை,விளம்பரங்கள்,பொது நிகழ்ச்சி என்று பிசியாகவே இருக்கிறார்.அது மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அன்று 


Actress Sridevi vintage photos (15)
இன்று

3.Actress Ambika/நடிகை அம்பிகா  
ஒரு காலத்தில் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த அக்கா தங்கைகள் அம்பிகாவும் ராதாவும்.மூத்தவர் அம்பிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்.தொடர்ந்து கமல், ரஜினி என முன்னணி நட்சத்திரங்களுடன் நாயகியாக நடித்த அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.அமெரிக்காவில் உள்ள ஏதோ ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துவிட்டு அமெரிக்க சென்று செட்டில் ஆனவர் பின் என்ன நடந்ததோ விவாகரத்து வாங்கி விட்டு 1999'இல் ரவிகாந்தன் என்பவரை திருமணம் செய்தார்.இடையில் அதிருமனத்திலும் ஏதோ  பிரச்சனை என்று செய்தி வர இப்போது தனியாக தான் வசித்து வருகிறார். 
அன்று 



இன்று
Radhas daughter Karthika makes film debut  
4.Actress Radha/நடிகை ராதா 
ஒரு காலத்தில் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த அக்கா தங்கைகள் அம்பிகாவும் ராதாவும்.இளையவர் ராதாவின் இயற்பெயர் "உதய சந்திரிகா".அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.முன்னணியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு கணவருடன் செட்டிலானார்.இவருக்கு 3 குழந்தைகள்.இவரது மூத்த மகள் கார்த்திகா தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.திருமணதிற்கு பின் சினிமாவை விட்டு விலகிய ராதா தற்போது மகளுக்கு சினிமாவில் உறுதுணையாக இருந்து வருகிறார்.
அன்று 
இன்று
5.Actress Amala/நடிகை அமலா 
இவர் ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக கோடி கட்டிப்பறந்தவர்.முன்னணியில் இருக்கும்போதே முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து மணந்தார்.நாகார்ஜுனா ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்தவர்.ஒரு குழந்தைக்கு தாயான இவர் திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தினருடன் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.கணவர் துணையுடன் விலங்குகளுக்கான ப்ளூ க்ராஸ் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.
அன்று 
இன்று
6.Actress Shobana/நடிகை ஷோபனா 
இவரது முழுப்பெயர் ஷோபனா சந்திரகுமார்.இவர் நாட்டிய தாரகைகள் லலிதா,பத்மினி,ராகினி சகோதரிகளின் சகோதரன் மகள் ஆவார்.இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பரத நாட்டியத்தில் பிசியாக இருக்கும் இவர் தற்போது ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.இடையில் தான் திருமணம் செய்துக்கொள்ள போவதாக அறிவிப்பு வந்தது,அதன் பின்னர் மணமகன் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவர திருமணம் நின்றது.
அன்று 

இன்று
7.Actress Bhanupriya/நடிகை பானுப்ரியா 
தென் திரை உலகில் முன்னணி நாயகியாக வளம் வந்த இவர்,பிசியாக இருக்கும்போதே ஆதர்ஷ் என்பவரை மணம் புரிந்து அமெரிக்காவில் செட்டில் ஆனார்.ஒரு குழந்தைக்கு தாயான இவர் தற்போது கணவர் மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார்.சிறந்த பரத நாட்டிய கலைஞர் ஆன இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு குருவிடம் முறைப்படி பரதம் கற்று வருகிறார். 
அன்று 

இன்று
8.Actress Ranjitha/நடிகை ரஞ்சிதா 
இவரை போலவே இவரது சர்ச்சைகளும் மிகவும் பிரபலமானது.இவரது இயற்பெயர் "ஸ்ரீவள்ளி".மார்க்கெட் இழந்ததும் ராணுவ வீரர் ராகேஷ் மேனனை திருமணம் செய்து செட்டில் ஆன இவர்,அதன் பிறகு சின்னத்திரையிலும் சினிமாவில் குணசித்திர வேடத்திலும் நடித்து வந்தார்.அதன் பிறகு திடீரென்று இவரையும் ஒரு சாமியாரையும் இணைத்து பரவிய வீடியோவால் மூலை முடுக்கு எல்லாம் பிரபலமாகி விட்டார்.
அன்று 

இன்று
9.Actress Urvashi/நடிகை ஊர்வசி 
இவரது இயற்பெயர் கவிதா ரஞ்சினி.இவருக்கு காமெடி நடிப்பு கை வந்த கலை.சக நடிகர் மனோஜை காதல் திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான இவரது திருமண வாழ்வு சில காலமே நீடித்தது.பரஸ்பரம் விவாகரத்து வாங்கி பிரிந்த பின்னர் மீண்டு சினிமாவில் நடித்து வருகிறார்.
அன்று 

இன்று

10.Actress Radhika/நடிகை ராதிகா 
பழம்பெரு நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளும் பிரபல நடிகர் ராதாரவி,நிரோஷாவின் சகோதரியுமான இவர் தனது தனித்தன்மை வாய்ந்த நடிப்பால் புகழ் பெற்றவர்.பிரதாப் பொத்தான் உடனான முதல் திருமணம் விவாகரத்தில் முடிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டியை மணந்து ஒரு குழந்தைக்கும் தாயானார்.இரண்டாவது திருமணமும் விவாகரத்து ஆக,சிறிது காலம் தனியாக வாழ்ந்து வந்த இவர் பின்னர் சக நடிகர் சரத் குமாரை காதலித்து மணந்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார்.தற்போது ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பு,சினிமா,அரசியல் என்று பிசியாகவே இருக்கிறார்.
அன்று 

இன்று
 

No comments: