Search This Blog

Thursday, May 24, 2012

Tamil Actors Now and Then Pictures [Part-1]– தமிழ் நடிகர்கள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-1]


Tamil Actors Now and Then Pictures [Part-1]–  தமிழ் நடிகர்கள் அன்றும் இன்றும் புகைப்படங்கள்[பகுதி-1]

நடிகர்களுக்கு வயதாவதேயில்லை என்று கூறுவார்கள்.கதாநாயகர்களாக உச்சத்தில் இருக்கும்/இருந்த இவர்கள் அனைவருக்கும் வயது 50'க்கு மேல்.இவர்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்,என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?சில படங்கள் உங்களுக்காக...

1.Actor Rajinikanth/நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்று 'ராஜா சின்ன ரோஜா' படத்தில் ஒரு பாடல் உண்டு.அந்து நூறுக்கு நூறு சதவீதம் உண்மை.இப்போதுள்ள சிறு குழந்தைகளை கேட்டால் கூட இவரை தெரியாதவர்கள் இல்லை.ரசிகர்கள் இவரை 'தலைவர்' என்றும் 'சூப்பர் ஸ்டார்' என்றும் அன்புடன் அழைக்கின்றனர்.

இவரது இயற்பெயர் "சிவாஜி ராவ் கைக்வாட்". டிசம்பர் 121950 பிறந்த இவருக்கு இப்போது வயது 61.இவர் மனைவி பெயர் லதா.இவருக்கு ஐஸ்வர்யா,சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.பிரபல நடிகர் தனுஷ் இவரது மருமகன்.மூத்த மகள் மூலமாக இவருக்கு இரு பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

இயக்குனர் பாலசந்தரின் கண்டுப்பிடிப்பான இவரது ஸ்டைலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது.ஐந்து வயதான போது தன் தாயைஇழந்த இவர்  படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராகபணியாற்றினார்நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த  ரஜினிகாந்த் ,ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்துபயின்றார்1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.

ஆரம்பத்தில் சிறு வேடங்களிலும்,வில்லனாகவும் நடித்து வந்த அவர் மெல்ல மெல்ல கதையின் நாயகனாக நடிக்க தொடங்கின்.மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு இருந்த இவரது ஸ்டைல்,வசன உச்சரிப்பு,நடனம்,சண்டை ,துருதுருப்பு,காமெடி என்று மக்கள் மனதில் உறுதியான இடத்தை பிடித்தார்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவரது படங்கள் அனைத்தையும்  குடும்பத்துடன் தைரியமாக சென்று பார்க்கலாம்.இவருக்கு குழந்தை ரசிகர்கள் மிக அதிகம்.

இவர் நடித்த பில்லா,பாட்சா,வேலைக்காரன்,பொல்லாதவன்,அண்ணாமலை,படையப்பா  போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களால் பேசப்படுபவை.

நடிகர் என்பதற்கு அப்பாற்பட்டு ஒரு சிறந்த மனிதர் இவர்.யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பலருக்கு உதவி வரும் இவர் மிகவும் எ.பல ஏழைகள் வீடுகளில் சாமி படங்கள் வரிசையில் இவர் படமும் இருப்பதை காணலாம்.

இவருக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர்.குறிப்பாக ஜப்பானில் இவரது படங்களுக்கு மிகபெரிய வரவேற்பு உள்ளது.இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும் இவர் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார்.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர்,அடிக்கடி இமயமலை சென்று வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இடையில் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்த போவதாக அறிவித்த இவர்,ரசிகர்கள் வேண்டுக்கோளுக்கு இணங்க மீண்டும் நடித்து வருகிறார்.
அன்று

இன்று

2.Actor Kamal Hassan/நடிகர் கமல்ஹாசன்

'களத்தூர் கண்ணம்மா' திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்,அதன் பிறகு  நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழும் பெற்றார்.கமல்ஹாசன், தமிழ் தவிர ஹிந்தி,தெலுங்குமலையாளம்கன்னடம்வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.நடிகராக மட்டும் அல்லாமல் இயக்குனர்,எழுத்தாளர்,பாடகர் என்று பல பரிமாணங்களை உடைய இவர் ஒரு சிறந்த பரத கலைஞரும் கூட. 

 நவம்பர் 71954 அன்று பிறந்த இவருக்கு வயது 58.இவருக்கு சுருதி,அக்ஷரா என்று இரு மகள்கள் உள்ளனர்.

மற்றவர்கள் நடிக்க தயங்கும் காட்சிகளில் கூட அசாதாரணமாக நடித்து செல்லும் இவர் தொடர்ந்து முத்தக்காட்சிகளில் நடித்ததால் முத்த நாயகன் என்ற பெயரை பெற்றார்.பல விருதுகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு திரைத்துறையில் இது 51-வது வருடம்.

திரைத்துறையில் பல வெற்றிகளை பெற்றாலும் இவரது தனிப்பட்ட வாழ்க்கை பல மேடு பள்ளங்கள் நிறைந்தது.நிஜவாழ்க்கையிலும் காதல் மன்னனாக திகழ்ந்த இவருக்கு இரண்டு மனைவிகள்.மூத்தவர் வாணி கணபதி.இவர் ஒரு நடன கலைஞர் ஆவார்.இவர்களது ஏழு வருட திருமணம் முடிவுக்கு வந்ததுக்கு காரணம் கமல் சக நடிகை சரிகாவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தது தான்.

1988 முதல் சரிகாவுடன் திருமணம் செய்யாமலே வாழ தொடங்கிய இவருக்கு அவர் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.இரு குழந்தைகள் பிறந்த பின்னர் தான் திருமணம் என்று முடிவு செய்த நிலையில் இளைய மகள் அக்ஷரா பிறந்த பிறகு திருமணம் செய்த இவர்கள் உறவு 19 வருடத்திற்கு பின் 2004'இல் முடிவுக்கு வந்தது.இவர்கள் விவாகரத்துக்கு காரணம் கமல் சக நடிகை சிம்ரனுடன் நெருங்கி பழகியது.

ஆனால் சிம்ரன் திடீரென்று கமலை விட்டு விலகி தனது குடும்ப நண்பரை திருமணம் செய்து செட்டிலானார்.இதற்கு பின்னணியில் இருப்பது ஒரு பெரிய நடிகர் தான் என்று கூறுவார்கள்.சரிகாவை பிரிந்த பின்னர் 2004'ம் ஆண்டு முதல் தன்னுடன் நடித்த நடிகை கௌதமியுடன் வாழ்ந்து வருகிறார்.

கௌதமிக்கு மார்பு புற்று நோய் வந்தபோது கமல் தான் அவருக்கு உறுதுணையாக இருந்து பார்த்துக் கொண்டார்.கௌதமி விவாகரத்தானவர்.தற்போது கமல்,அவருடைய மகள்கள்,கௌதமி,அவருடைய மகள் சுப்புலட்சுமி அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.கமல் மகள்களை கௌதமி தான் பராமரித்து வருகிறார்.
அன்று
மனைவி சரிகாகுழந்தைகளுடன்

முதல் மனைவி வாணி கணபதி 
இன்று 
Kamalhassan's New Wife Gouthami N Daughters; couple, family, gauthami, kamal, kamalhassan, love, lovers, marriage, people, relationship

3.Actor Vijayakanth/நடிகர் விஜயகாந்த்
மதுரையை சேர்ந்த இவரது இயற்பெயர்"விஜயராஜ் பிரபாகர் அழகர்சாமி".ரசிகர்களால் 'கேப்டன்','புரட்சி கலைஞர்' என்று அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு வயது 59.

இவர் மனைவி பெயர் பிரேமா லதா.இவருக்கு விஜய் பிரபாகர்,ஷண்முக பாண்டியன் என்று இரு மகன்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் அதிரடி என்றாலே அது விஜயகாந்த் தான் என்னும் அளவுக்கு அதிக அளவில் அதிரடி படங்களில் நடித்தவர்.சண்டை காட்சிகளில் மட்டுமல்லாமல் காமெடி மற்றும் நடிப்பிலும் சிறந்தவர்.

கிராமத்து கதைகளில் அப்பாத்திரமாகவே மாறி விடுபவர்,படிக்காத பண்ணையாராக கவுண்டமணி செந்திலுடன் இணைந்து இவர் செய்யும் ரகளைகள் இவரது காமெடிக்கு சான்று.அதிலும் குறிப்பாக ஒரு படத்தில் பூனையை குளிப்பாட்டி துணி பிழிவது பிழிவார் விஜயகாந்த்.அந்த காட்சியில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது.

போலீஸ் அதிகாரியாக அதிக படங்களில் நடித்திருக்கும் இவரது கேப்டன்  பிரபாகரன்,வல்லரசு,நரசிம்மா போன்ற படங்கள் இவரது அதிரடிக்கு சான்று.கண்ணுபட போகுதையா,தவசி,சொக்க தங்கம் போன்ற படங்களில் திறைமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் படங்களின் சிறப்பே இவர் நடிக்கும் படங்களை குடும்பத்துடன் காணலாம் என்பது தான்.

இதுவரை 153 படங்களில் நடித்துள்ள இவர் அரசியலில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக திரை உலகில் இருந்து ஓய்வு பெற்று,புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
அன்று
இன்று

4.Actor Sathyaraj/நடிகர்சத்யராஜ்
தமிழ் திரை உலகில் தனது லொள்ளுதனத்தால் இடம் பிடித்த இவருக்கு வயது 57.
இவரது இயற்பெயர் "ரங்கராஜ் சுப்பையா".

முதலில் வில்லனாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர்,'தகிடு தகிடு','என் கேரக்டரையே புரிஞ்சுக்க மட்டேன்குரீங்களே' போன்ற வசனங்களால் பெரும் வரவேற்பை பெற்றார்.கமல் ஹாசனின் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' படம் மூலமாக கதாநாயகனாக களம் இறங்கி பல வெற்றிகளை குவித்தார்.

பிற படங்களில் வந்த சீரியஸ் காட்சிகளை இவரது படங்களில் காமெடியாக சித்தரிப்பார்.

பெரியாரின் கொள்கைளை பின்பற்றும் இவர் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்த 'பெரியார்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தா. தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அன்று
இன்று
5.Actor Prabhu/நடிகர் பிரபு
வய நடிகர் திலகம் சிவாஜியின் மகனான இவர் தந்தையை போலவே சினிமாவில் நுழைந்தார்.இவரது முழுப்பெயர் ''பிரபு கணேசன்''.

'சங்கிலி' திரைப்படம் மூலமாக அறிமுகமான இவருக்கு இப்போது வயது 55.இவரது மனைவி பெயர் புனிதா.இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

தனிக்கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று கூறாமல் சக நடிகர்கள் 'ரஜினி,கமல்,சத்யராஜ்,கார்த்திக்குடன்' சேர்ந்து நடித்த படங்கள் சக்கை போடு போட்டன.தனது தந்தையுடனும் பல படங்களில் நடித்துள்ளார்.

இடையில் சக நடிகை குஷ்பூவுடன் ஏற்பட்ட பழக்கம் அவர் குடும்பத்தில் புயலை கிளப்ப,அவரை அவரை விட்டு விலகினார்.அதன் பிறகு சில காலம் இணைந்து நடிக்காமல் இருந்த இவர்கள் இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்க துவங்கி இருக்கிறார்கள்.

ரசிகர்களால் 'இளைய திலகம்' என்று அழைக்கப்படும் இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.   
அன்று
  
இன்று
6.Actor Mohan/நடிகர் மோகன்
ஒரு காலத்தில் தன் வீட்டு வாசலில் தயாரிப்பாளர் கூட்டத்தை காக்க வைத்த பெருமை மோகனுக்கு உண்டு.ஒரு டஜன் படங்களுக்கு மேல் வெள்ளி விழா கொண்டாடியது.இவரது படங்களில் இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவை.பெரும்பாலான படங்களில் மைக் பிடித்து பாட்டு பாடியதால் "மைக் மோகன்" என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் மோகனுக்கு இடையில் சில பல வருடங்கள் இருண்ட காலமாகவே அமைந்துபோனது. 

இவரது இயற்பெயர் "மோகன் ராவ்".இவருக்கு இப்போது வயது 55.

ஒருமுறை நடிகர் கமல்ஹாசன் பேட்டியில் நகைச்சுவையாக சொல்லியிருந்தார். “அக்காலக் கட்டத்தில் ஒரு நடிகர் மைக்கை கையில் எடுத்துவிட்டால் அடுத்தடுத்த படங்களிலும் மைக்கை கையில் கொடுத்துவிடுவார்கள். அதுபோலவே நான் நடித்த பல படங்களில் மேடையில் மைக்கை வைத்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக மோகன் வந்து என் மைக்கை பிடுங்கிக் கொண்டார்”.

இடையே அவரது பகீரத முயற்சியால் எடுக்கப்பட்ட 'அன்புள்ள காதலுக்கு' படமும் பெட்டிக்குள் போக,அடுத்து சிறிது இடைவெளி விட்டு எடுத்த சுட்ட பழம் சிறிது கை கொடுத்தது.இப்போது பிறமொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் வில்லனாக நடிக்கும் முடிவில் இருக்கிறார்.
அன்று

இன்று
7.Actor Karthik/நடிகர் கார்த்திக்
அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் பழம்பெரும் முத்துராமனின் மகன் ஆவார்.இவருக்கு இப்போது வயது 51.

இவருடன் அறிமுகமானவர் தான் நடிகை ராதா.இருவரைப் பற்றியும் வராத கிசுகிசுக்களே இல்லை.திருமணத்துக்குப் பிறகு ராதா நடிக்கவில்லை. தனது மூத்த மகளுக்கு அவர் கார்த்திகா எனப் பெயர் வைத்தார்.இப்போது இருவரது வாரிசுகளும் சேர்ந்து நடிக்க போவதாக பேசப்படுகிறது.

வாய்ப்புகள் குறைந்த நிலையில் அரசியில் இறங்கிய அவர்,அதிலும் பெரிதாக சோபிக்கவில்லை.தற்போது மீண்டும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அன்று
இன்று
8.Actor Nepolean/நடிகர் நெப்போலியன்
இவரது இயற்பெயர் "குமரேசன் துரைசாமி".மாவீரன் என்று அழைக்கப்பட்ட இவர் வில்லனாக,நாயகனாகவும்,குணசித்திர வேடங்களிலும் கலக்கியவர்.அரசியல் ஆர்வத்தில் தி.மு.க'வில் சேர்ந்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியல்வாதி ஆகி விட்டார்.
அன்று
இன்று
9.Actor Bhagyaraj/நடிகர் பாக்யராஜ்
இவரது இயற்பெயர் "கிருஷ்ணசாமி பாக்யராஜ்".தெலுங்கு குடும்பத்தில் பிறந்த இவற்றுக்கு வயது 60.நடிகர்,இயக்குனர்,திரைக்கதை எழுத்தாளர் என்று பல பரிமாணங்களை கொண்ட இவர் தனது முதல் மனைவி பிரவீணா இறந்த பின்னர் சக நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்துக் கொண்டார்.இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருவதோடு படங்களை இயக்கவும் செய்கிறார்.
அன்று
இன்று

10.Actor Arjun/நடிகர் அர்ஜூன்  
தமிழ் சினிமாவின் ஆக்ஷ்ன் கிங் என்று வர்ணிக்கப்படும்நடிகர் அர்ஜூன், தீவிர ஆஞ்சநேயர் பக்தர்இவரது இயற் பெயர் "அர்ஜூன் சர்ஜா".இவருக்கு இப்போது வயது 47.

ஷங்கரின் முதல்வன்,ஜென்டில் மேன்  போன்ற படங்கள் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைய,ஆக்ஷன் படங்களில் கொடிகட்டி பறந்தார்.தற்காப்பு கலைகளில் வல்லவரான இவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
சக நடிகை நிவேதிதாவை காதலித்து மணந்த இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
 நடிகர் அர்ஜுன் சொந்த செலவில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டி பிரதிஷ்ட்டை செய்துள்ளார்.தற்போது கதாநாயகனாக மட்டும் இல்லாமல் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அன்று 
இன்று

No comments: