Search This Blog

Thursday, May 31, 2012

உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் பெரிய வீடுகள்

உலகின் சிறிய மற்றும் பெரிய வீடுகள் 
உலகிலேயே சிறிய வீடு இது தான். கலிபோர்னியாவின் [California] வெளிப்பகுதியில் அமைந்துள்ள செபச்டோல் [Sebastol] என்னும் இடத்தில் தான் இந்த வீடு உள்ளது.

கட்டிட வல்லுநர் ஜே ஷாபார் [Jay Shafer] என்பவர் தான் இதன் உரிமையாளர்.சிறுவனாக இருக்கும்போதே மிகவும் சிறிய வீடொன்றை கட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்ததாம்.இந்த வீட்டின் மொத்த சதுர அளவே 96 அடி தான். இதனுள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் வடிவமைக்கப்பட்ட சமையலறை,பொருட்கள் வைக்க உதவியாக சிறிய அறை,மற்றும் மரத்திலான உள் வடிவமைப்பும் செய்யப்பட்டுள்ளது.

இவரின் கனவு என்னவென்றால்,இதே போல் சிறிய வீடுகளுக்கான இயக்கம் ஒன்றை நிறுவி நடைபாதை வசதிகளுடன் கூடிய சிறிய வீடுகளை காலனி போல் உருவாக்க வேண்டும் என்பதே ஆகும்.நல்ல விஷயம் தான்.
World


உலகின் மிக பெரிய வீடு,மன்னிக்கவும் மாளிகை இங்கிலாந்தின் பெர்க் ஷைர் [Berk Shire] என்னும் இடத்தில் உள்ள விண்ட்சொர் காஸ்டில் [Windsor Castle] தான். 13 ஏக்கர் பரப்பளவில் 484,000 சதுர அடியில் ஒய்யாரமாக அமைந்துள்ள இந்த மாளிகையில் மொத்தம் 1000 அறைகள் உள்ளன.பக்கிங்ஹாம் அரண்மனை போல இதுவும் இங்கிலாந்தின் அரச குடும்பத்திற்கு சொந்தமான மாளிகையே.
1952 'இல் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்து இம்மாளிகையில் தான் வசித்தார்.


World’s Biggest House

No comments: