Search This Blog

Thursday, May 24, 2012

கரும்பின் பயன்கள்

ஆண்மையை பெருக்க அருமருந்தாகும் கரும்பு-கரும்பின் பயன்கள் 

வெயில் காலம் தொடங்கி விட்டது.இந்த வெய்யில் காலத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பு பால் விற்கிறார்கள் .இந்த கரும்பில் பல பயன்கள் உள்ளன.


கரும்புச்சாறு ஆண்மையை பெருக்கும் அற்புத உணவு.....கரும்புச்சாறு இனிப்பானது..இது ஆண்களின் சுக்கிலத்தை பெருக்கக்கூடிய சிறந்த மருந்து.....


தினசரி ஒரு டீயை கட் செய்துவிட்டு கரும்புசாறு குடியுங்கள்...ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் இளமையை பாதுகாக்கும் அற்புத பால் இது....இளமையோடு ஒருவர் இருக்க ஆசைப்பட்டால் தினசரி கரும்பு சாறு ஒரு டம்ளர் குடித்தால் போதும்....




இது உடல் உஸ்ணத்தை குறைப்பது மட்டுமின்றி,இரும்பு சத்து பலவிதமான விட்டமின்களும் களைப்பு அடையாமல் உடலுக்கு பலமும் தருகிறது....குழந்தைகள் குடித்தால் சளி பிடிக்கும் என வங்கி தராமல் இருக்காதீர்கள் வளரும் பருவத்தில் அவர்கள் உடலுக்கு தேவையான முக்கிய சத்துகள் அடங்கிய உணவு இது....இதை போன்ற உணவுகளை தவிர்த்து,தராமல் தவிட்டில் சர்க்கரை சேர்த்த பிஸ்கட்டை மட்டும் கொடுத்து உங்கள் குழந்தையை வளர்த்தால் முருங்கை தண்டு போல உங்கள் குழந்தை வலுவில்லாமல்தான் வளருவான்..

சித்த வைத்தியத்தில் கரும்பின் வேறு பெயர்களாக புனற்பூசம், இக்கு, வேய் என அழைக்கப்படுகிறது. மருத்துவப் பயன்பாட்டுக்கு கரும்புச்சாறு, சர்க்கரை, வேர் பயனாகிறது. இவை இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மை கொண்டது
.
கரும்புச்சாறு : இதன் சாற்றை அதிகமாக சாப்பிட்டால் சந்தேக நோயுண்டாகும். மிதமாக சாப்பிட்டால் வெள்ளை, அழற்சி பெருக்கு அடங்கும்.
செங்கரும்பின் சாறு : இதன் சாறு பித்தத்தைக் குறைக்கிறது.
நல்ல வெல்லம் : இது பித்தத்தைப் போக்கிடும். வயிற்றுப் புழுக்களையும், நீரிழிவையும் ஏற்படுத்தும்.
பழுப்புச்சர்க்கரை : கரும்பின் சாற்றைக் காயச்சி சர்க்கரை செய்யப்படுகிறது. இது மருந்துகளுக்குத் தேவையாயுள்ளது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது. கெட்டியான சளியைக் கரைத்து சுகம் தருகிறது.
சீனிச்சர்க்கரை : இது வாத ஜுரம், வாத நோய், நுண்மையான புழு, விக்கல்களை நீக்குகிறது.
கற்கண்டு : சர்க்கரையைக் கொண்டு கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு எடுத்து சிறிதளவு பொரிகாரம் சேர்த்து 7 தினங்கள் சாப்பிட்டு வந்தால், விந்து நீர்த்தல் நீங்கும். மேலும் பல்லரணை, (ஈறு தடிப்பு) இருமல், வாந்தி ஆகியவை தீரும்.


No comments: