Search This Blog

Sunday, April 29, 2012

மாண்டிசெல்லோ அணை - Monticello Dam

மாண்டிசெல்லோ அணை 
- Monticello டம்
by Prince
இணையதளத்தில் சிறிது நாட்களுக்கு முன்பு தான் மாண்டிசெல்லோ அணையின் புகைப்படத்தை பார்த்தேன்,இதற்கு முன்பு பல முறை பார்த்திருந்தாலும் ஆர்வம் உந்தி தள்ள அதை குறித்து மேலும் படித்த போது தான் அது ஒரு அணை என்பதை தெரிந்துக்கொண்டேன்.மேலும் அதன் கட்டடவியல் திறனை பார்த்து மெய் மறந்து விட்டேன் என்று தான் கூற வேண்டும்.அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்பி இப்பதிவை எழுதுகிறேன்.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.


மாண்டிசெல்லோ அணை - [Monticello Dam], ஐக்கிய அமெரிக்காவில் உள்ள காலிபோர்னியா மாகாணத்தில் 1953-1957'க்கு இடையில் கட்டப்பட்ட ஒரு அணையாகும்.கான்கிரீட்-வளைவுகளால் ஆன இந்த அணையின் கட்டமைப்பு உயரம் 304 அடியாகும் [93 மீட்டர்],இதன் முகடு நீளம் 1 ,023 அடியாகும் [312 மீட்டர்].

பெரியாசா ஏரியின் [Lake Berryessa],குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணை 1,602,000 ஏக்கர்(1.976×109 m3) நீர்த்தேக்கம் திறன் உள்ளது.இந்த அணையின் நீர் மின்சாரம் தயாரிக்கவும்,விவசாய பயன்பாட்டிற்கும்,மக்களின் குடிநீர் தேவைக்கும் உபயோகப்படுத்தப் படுகிறது.
File:Monticello Dam from usbr gov.gif
காலிபோர்னியா மாகாணத்தின் இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் மாண்டிசெல்லோ அணையை கட்டுவதற்காக மாண்டிசெல்லோ என்ற பெரிய நகரத்தை காலி செய்தனர்.

மாண்டிசெல்லோ அணை அதன் மிகப்பெரிய தளும்புவாயிலுக்கு [Spillway] பெயர்போனது.அந்த தளும்புவாயிலுக்கு மார்னிங் க்ளோரி [Morning-Glory] அல்லது "க்ளோரி ஹோல்" [The Glory Hole] என்று பெயர்.
இது தான் அந்த தளும்புவாயில் 
"க்ளோரி ஹோல்" [The Glory Hole] 
அணையின் பல்வேறு படங்கள் 
இந்த அணையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பனி 1983'ம் ஆண்டு தொடங்கியது.இதில் 3 ஜெனரேட்டர்கள் உள்ளன.இந்த அணையில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தின் வடக்கு பகுதியின் மின் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
File:Monticellodamgloryhole2009-10-10.JPG
இது 2010'ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீர் நிலை 407.72 அடியாக [124.27 மீட்டர்] இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
File:Monticello dam from the viewpoint.jpg
அணையின் வெளிப்பகுதி
Monticello Dam
அணையின் வரைபடம் 
இந்த அணை தொடர்பான மேலும் பல செய்திகளுக்கு என்னுடைய மற்ற பதிவுகளை பார்வையிடவும்.
வீடியோ:


2 comments:

Anonymous said...

My brother suggested I might like this website. He was entirely right.
This post truly made my day. You cann't imagine simply how much time I had spent for this info! Thanks!
My homepage ... Wood Working Shows

Allinone said...

Thank you so much...Please visit again...