Search This Blog

Wednesday, April 11, 2012

டைட்டானிக் ஓர் நினைவு பயணம் (In the Memory of Titanic)டைட்டானிக் ஓர் நினைவு பயணம்:-
by Prince
File:RMS Titanic 3.jpg

MS Titanic departing Southampton on 10 April 1912      
      
டைட்டானிக் உலகின் முதல் பெரிய பயணிகள் நீராவி கப்பல் மட்டுமல்ல, முதல் பயணத்திலேயே கடலோடு கலந்து இன்றளவும் மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திய கப்பல்.

டைட்டானிக் என்றதும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய மாபெரும் திரைக்காவியம் தான் பலர் நினைவுக்கும் வரும். டைட்டானிக் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் அதை நினைவு கூரும் வகையில் ஓர் சிறிய பயணம்.பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்.

டைட்டானிக் தனது கன்னிப் பயணத்தை ஏப்ரல் 12,1912 புதன் கிழமை அன்று இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரை நோக்கி தான் பயணத்தை தொடங்கியது.

மொத்தம் 2,224 பயணிகளுடன் பயணித்த டைட்டானிக் ஏப்ரல் 14,1912 அன்று வடக்கு அட்லாண்டிக் கடலில் பெரிய பனிப்பாறையில் மோதி ஏப்ரல் 15,1912 அன்று முற்றிலுமாக மூழ்கியது.

அன்று முதல் கப்பலை பற்றிய பலவாறான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.அதை குறித்து பல்வேறு புத்தகங்கள் திரைப்படங்கள் எடுக்க பட்டபோதும் ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் மட்டுமே மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.பயணிகளின் அன்றைய மரண போராட்டத்தை கண்கள் முன் கொண்டு வந்து மனதை உருக்கியது.
              Video:
டைட்டானிக் விபத்துக்கு சொல்லப்படும் முக்கியமான காரணம்,அதிகாரிகளின் கவனக்குறைவே.

சம்பவத்தன்று S.S. Californian என்ற கப்பல் பனி பாறைகள் குறித்து டைட்டானிக்கை எச்சரிக்கை செய்துள்ளது.ஆனால் அதை கண்டு கொள்ளாமல் முன்னேறிய டைட்டானிக் சிறிது நேரத்திலேயே பனி பாறையில் மோதி மூழ்க ஆரம்பித்தது. உடனடியாக உதவி கோரி கப்பலின் பல திசைகளிலிருந்தும் செய்தி அனுப்பப்பட்டது.

உதவி கோரி வண்ண புகையை கக்கும் ராக்கெட்டுகள் ஏவப்படும் பழக்கம் பொதுவாக நடைமுறையில் உள்ளது.அதே போன்று அன்றும் பல ராக்கெட்டுகள் டைட்டானிக்கில் இருந்து ஏவப்பட்டுள்ளது.

S.S. Californian சுமார் ஒரு மணி அளவில் தான் அதை கண்டது,ஆனால் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் வண்ண புகைக்கு பதிலாக வெள்ளை நிற புகையை கக்கியதால்
உண்மையை உணரவில்லை.


கடைசியாக 1.50 மணிக்கு சில ராக்கெட்டுகள் மீண்டும் தென்பட்டன.அது மட்டுமல்லாது தொலைவில் தெரிந்த கப்பல் அசாதாரண நிலையில் இருப்பதை S.S. Californian கண்டது.பின்னர் இறுதியாக சுமார் 2.15 மணியளவில் தொலைவில் தெரிந்த கப்பல் முற்றிலுமாக காணாமல் போய் விட்டதை பார்த்த அதிகாரி ஒருவர்,வேறொரு கப்பலை தொடர்பு கொண்டதில் அது டைட்டானிக் தான் என்பதும் அது விபதுக்குளாகி மூழ்கியதும் தெரிந்தது.


டைட்டானிக் உதவி கோரியபோது பல கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்தடைய இயலாத தொலைவில் இருந்தன,அருகில் இருந்த S.S. Californian தக்க நேரத்தில் செயல் பட்டிருந்தால் பலரை காப்பாற்றியிருக்கலாம்.
S.S. Californian சம்பவ இடத்தை சென்றடைவதற்குள் RMS Carpathia என்ற மற்றொரு பயணிகள் கப்பல் உயிர் பிழைத்தவர்களை மீட்டு விட்டது.


மீட்கப்பட்ட பயணிகளுடன் RMS Carpathia மூன்று நாட்கள் கழித்து அதாவது ஏப்ரல் 18,1912 அன்று நியூ யார்க் நகரை வந்தடைந்தது.


டைட்டானிக் மூழ்கிய செய்தி மக்கள் மத்தியில் இடியாக வந்திறங்கியது.மூழ்க வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட டைட்டானிக் தனது முதல் பயணத்திலேயே முடிவையும் தேடிக்கொண்டது.
  • டைட்டானிக்கில் பயணம் செய்தவர்கள் மொத்தம்  2,224 பேர்.
  • பிழைத்தவர்கள் 710  பேர்.
  • இறந்து போனவர்கள்  1,514 பேர்.
கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணி மில்வினா டீன் (MiIlvina Dean).கப்பலில் இருந்த மிகவும் வயது குறைந்த பயணி இவராவார்.அன்று இவரது வயது இரண்டு மாதங்களே ஆகும்.

படிமம்:Millvina dean-april 1999.jpg
MiIlvina Dean

விபத்து நடந்ததும் உதவி படகில் தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்னும் விதிப்படி முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீட்க பட்டனர்.அதனால் கப்பலில் இருந்த பெரும்பான்மையான ஆண்கள் பலியாயினர்.


விபத்தின் போது கதவு மூடி இருந்ததால் உள்ளே மாட்டிக்கொண்டு இறந்தவர்கள் பல பேர். தப்பிக்க எண்ணி தண்ணீரில் குதித்து குளிரில் உறைந்தவர்கள் பலர்.ஆம்,அன்று தண்ணீர் வெப்பநிலை குறைந்து  28 °F (-2 °C) ஆக இருந்தது.

உலகளவில் எத்தனையோ பெரிய இயற்கை பேரழிவுகள் நேர்ந்திருந்தாலும் டைட்டானிக் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது.

1912,மே மாதம் இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் பல கப்பல்கள் ஈடுபட்டன.ஆனால் உடல்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பல பேரின் உடல்கள் கடலிலேயே அடக்கம் செய்யப்பட்டன.


சுகாதார விதிமுறைகளின்  படி பாதுகாக்கப்பட்ட உடல்கள் மட்டுமே துறைமுகத்திற்கு எடுத்து செல்லப்பட இயலும்.ஆனால் கப்பலில் போதுமான அளவு மருந்து இல்லாததால் முதல் வகுப்பில் பயணம் செய்தவர்கள் உடலை மட்டும் அடையாளம் கண்டு மருத்துவ முறையில் உடலை பாதுக்காக்க முடிவு செய்தனர்.அதன்படி மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தவர்கள் மற்றும் கப்பலில் பணியாளர்களின் உடல்களை கடலில் அடக்கம் செய்தனர்.
அகழ்வாராய்ச்சி பணிகள்:


File:Titanic wreck bow.jpg
The bow of the wrecked RMS Titanic, photographed in June 

2004 

கடலில் 12,000 அடி(3,800m) ஆழத்தில் மூழ்கிய டைட்டானிக்கை கண்டு பிடிக்க 1912'இல் இருந்து பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் அனைத்தும் தோல்வியை தழுவின.
அந்த காலத்தில் போதிய அளவு நவீன வசத்தில் இல்லாமை,மற்றும் மோசமான வெப்பநிலையே தோல்விகளுக்கு காரணமாக அமைந்தது.

இறுதியாக 1985'ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு டைட்டானிக் மூழ்கிய இடத்தை அடையாளம் கண்டனர்.

கப்பல் இரண்டு பாகங்களாக உடைந்து கிடக்க,அதில் இருந்த பொருட்கள் மட்டும் பிற பாகங்கள் அதை சுற்றி சிதறி கிடந்தன.அது வரை டைட்டானிக் உடையாமல் மொத்தமாக மூழ்கி விட்டது என்ற நம்பிக்கை பொய்யானது.
               Video:

தற்போது நவீன யுத்தியில் கப்பலின் பல புகைப்படங்கள் வெளியிட பட்டுள்ளன. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூட தன் படத்திற்காக அகழ்வாராய்ச்சியில் இறங்கி பல புகை படங்கள் மற்றும் வீடியோ எடுத்தது நினைவிருக்கலாம்.திரைப்படத்தில் ஆரம்பத்தில் காட்டப்படும் கப்பலும் உண்மையான டைட்டானிக் கப்பலே.


தொடர் ஆராய்சிகளுக்கு பிறகு இன்னும் 50 ஆண்டுகளில் டைட்டானிக் முழுமையாக அழிந்து கடலோடு கலந்து விடும் என்று நிபுணர் குழு தெரிவித்துள்ளது.


அகழ்வாராய்ச்சியில் மீட்க பட்ட பல பொருட்கள், கப்பலின் உடைந்த பாகங்கள் தற்போது பல அருங்காட்சியங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
Video:


எது எப்படியோ 100 வருடங்களுக்கு முன் மூழ்கிய டைட்டானிக் மக்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்திருக்கும்.
நன்றி.
Image Credits:Wikipidea
Thanks to Youtube

No comments: