Search This Blog

Monday, April 30, 2012

ஏஞ்ஜெலினா ஜோலியின் வாழ்க்கை-திரைக்குப்பின்னால்

ஏஞ்ஜெலினா ஜோலியின் வாழ்க்கை-திரைக்குப்பின்னால்
by Prince
துணிச்சலுக்கு பெயர் போனவர்கள் ஹாலிவுட் நடிகைகள்.அவர்களில் குறிப்பிடத்தக்கவர் "ஏஞ்ஜெலினா ஜோலி." உலகின் மிக அழகான பெண்கள் பட்டியலில் இடம்,உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.பல விஷயங்களில் மற்ற நடிகைகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் இவரது சொந்த வாழ்க்கையை பார்த்தால் இவர் எவ்வளவு துணிச்சலானவர் என்பது புரியும்.

ஹாலிவுட்டில் கவர்ச்சி,காதல்,திருமணம்,பாய்ப்ரண்ட் இதெல்லாம் பெரிய சமாச்சாரமே கிடையாது.நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக இவர்களது துணையும் மாறிக்கொண்டிருக்கும்.
தற்போது 36 வயதாகும் ஏஞ்ஜெலினா ஜோலி 1975'ம் ஆண்டு ஜூன் மாதம் 4'ந்தேதி பிறந்தவர்,இவரது பெற்றோர் ஜான் வாயிட்,மார்ச்சலீன்[Jon Voight,Merchaline Bertrand]ஆகியோர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ஆவர்.அதனால் சினிமா அவருக்கு மிகவும் சுலபமாகவே வாய்த்தது.
பெற்றோர்கள் 

தனது 14 வயதிலேயே காதலனுடன் தன் தாயின் வீட்டில் ஒரே அறையில் கணவன் மனைவி போல் வாழ்ந்தோம் என்று உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் என்றால் எப்படி பட்ட துணிச்சல்காரர் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.ஆனால் இளமை காதல் இரண்டு வருடங்களிலேயே கசந்து விட 16 வயதில் மீதும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார்.
தந்தை மற்றும் சகோதரருடன்

சிறு வயதிலேயே மிகவும் துணிச்சலான,அதே நேரம் கடினமான குழந்தையாக இருந்தார்.ஒரு பேட்டியில் 20 வயதில் தான் ஹெராயின் போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அந்த வயதில் தன் மனவலிகளை போக்கிக்கொள்ள கத்தி மற்றும் ப்ளேடால் தன் கைகள் மற்றும் உடலில் கீறிக்கொள்ளும் பழக்கமும் அவருக்கு இருந்துள்ளது.அதனால் தன் மனவலிகளில் இருந்து தற்காலிக விடுதலை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தை ஜான் வாயிட்

ஏஞ்ஜெலினா ஜோலி'க்கும் அவரது தந்தைக்கும் நடுவிலான உறவு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.சமீபத்தில் அவரது தாயார் இறந்த போது,அவரது அண்ணனும் நடிகருமான ஜேம்ஸ் ஹேவன்[James Haven]"எங்கள் தாய் இறந்த பிறகு நாங்கள் இருவரும் அநாதைகளாகி விட்டோம்"என்று கூறி இருந்தார்.
தனது சகோதரர் ஜேம்ஸ் ஹேவனுடன் 

வாழ்க்கையில் பல முடிவுகளை அவசர கதியில் எடுத்து அதனால் இவர் சந்தித்த விளைவுகள் பல.

1995'ம் ஆண்டு ஹெக்கேர்ஸ் [Hackers] என்ற படத்தில் நடித்தபோது உடன் நடித்த ஜானி லீ மில்லர் [Jonny Lee Miller] என்ற நடிகருடன் காதல் மலர்ந்தது. சந்தித்த மறு வருடமே அதாவது 1996'இல் திருமணம் செய்த இவர்கள் உறவு மறுவருடமே கசந்தது.1997'இல் பிரிந்த இவர்கள் 1999'இல் விவாகரத்து பெற்றனர்.

  
முதல் கணவர் ஜானியுடன் 

முதல் திருமணத்தின் போது வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் கருப்பு நிற பான்டில் தோன்றிய இவர் தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக டி-ஷர்ட்'இன் மேல் தனது கணவர் ஜானியின் பெயரை ரத்தத்தால் எழுதியிருந்தார்.

ஜோலிக்கு சக நடிகை ஜென்னி ஷிமிசு'வுடன் [Jenny Shimizu] இருந்த உறவை பல பேட்டிகளில் அவரே ஒத்துக்கொண்டுள்ளார்.
காதலி ஜென்னி ஷிமிசுவுடன் 
விவாகரத்தான மறுவருடமே,2000'ம் ஆண்டில் பில்லி பாப் தார்டன் [Billy Bob Thornton] என்பவரை திருமணம் செய்தார்.
இரண்டாவது கணவர் பில்லியுடன் 

இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் விதமாக தத்தம் கழுத்தில் தங்கள் இரத்தம் அடங்கிய சிறு குப்பிகளை அணிந்து நடந்தது,பத்திரிக்கைகளால் பரபரப்பான விஷயமாக கருதப்பட்டது.
ஏஞ்ஜெலினா ஜோலி மற்றும் பில்லி'இன் இரத்தம் அடங்கிய சிறு குப்பிகள் 

இந்த இரண்டாவது திருமணமும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாகவே முடிவுக்கு வந்தது.

அதன் பிறகு 2005'இல் Mr. and Mrs. Smith என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது சக நடிகர் பிராட் பிட்டுடன் [Brad Pitt] பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.எப்போதும் போல் வெறும் நட்பு தான் என்று கூறி வந்த ஜோலி திடீரென்று பிராட் பிட்டின் குழந்தைக்கு தாயாக போகிறேன் என்று.தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டு தங்கள் உறவை பகிரங்கமாக அறிவித்தார். 
Mr. and Mrs. ஸ்மித் திரைப்படத்தில்

பிராட் பிட் ஏற்கெனவே திருமணமானவர்.இவரது மனைவி பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் [Jennifer Aniston] தங்கள் திருமண முறிவுக்கு ஜோலி மற்றும் ப்ராட்டின் காதலே காரணம் என்று குற்றம் சாட்டினார்.

ஜெனிபர்'இன் குற்றச்சாட்டை மறுத்த ஜோலி,"என் தந்தை என் தாயை பிரிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்ததால் எங்கள் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.என் வாழ்க்கையில் அது போன்ற ஒரு தவறை எப்பொழுதும் செய்ய மாட்டேன்.மனைவிக்கு துரோகம் செய்கிறவனை எப்பொழும் நன் காதலிக்க மாட்டேன்." என்று கூறினார்.

பேட்டியின் சில வரிகள் உங்களுக்காக:
 "To be intimate with a married man, when my own father cheated on my mother, is not something I could forgive. I could not look at myself in the morning if I did that. I wouldn't be attracted to a man who would cheat on his wife."

அதன் பின் நடந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

ப்ராட்டும் குறைந்தவர் இல்லை.பல பெண்களுடன் காதல் மன்னனாக வளைய வந்தவர்.இறுதியில் ஜெனிபரை காதலித்து மணந்தார்.


காதலித்து திருமணம் செய்து கொண்ட பிராட் பிட்,ஜெனிபர் ஜோடி ஐந்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து பலராலும் வெற்றிகரமான ஜோடியாக கருதப்பட்டனர்.

ஆனால் யார் கண் பட்டதோ இவர்கள் வாழ்வில் ஏஞ்ஜெலினா ஜோலியின் வடிவில் புயல் வீசத் தொடங்கியது.

தங்கள் திருமணத்தை காப்பாற்றிக்கொள்ள  ஜெனிபர் செய்த முயற்சிகள் எல்லாம் வீணாய் போக,மெளனமாக விவாகரத்து பெற்று விலகிக்கொண்டார்.
முதல் மனைவி ஜெனிபர் அனிஸ்டனுடன்  

தற்போது திருமணமே செய்யாமல் இணைந்து வாழ்ந்து வரும் ஏஞ்ஜெலினா ஜோலி,பிராட் பிட் ஜோடியை ப்ராஞ்சலீனா[Brangelina] என்று வர்ணிக்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்.

எங்கே இன்னொரு நடிகை பின்னால் போய் விடுவாரோ என்ற பயத்தில் பிற நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் ப்ராட்டை நடிக்க அனுமதிப்பதில்லையாம் ஜோலி.

ஏஞ்ஜெலினா ஜோலி'க்கு மொத்தம் ஆறும் குழந்தைகள் பிராட் பிட்டுடன் பிறந்த குழந்தைகள் 3 பேர்.மற்ற குழந்தைகள் ஜோலியால் தத்து எடுக்கப்பட்டவர்கள்.
குழந்தைகளுடன் 

ஜோலி,பிராட் ஜோடிக்கு ஷிலோ நௌவேல் [Shiloh Nouvel] என்ற பெண் குழந்தையும்,நாக்ஸ் மற்றும் விவியன் [Knox and Vivienne] என்ற ரெட்டை குழந்தைகளும் உள்ளனர்.
photo
ஷிலோ நௌவேல்
நாக்ஸ் மற்றும் விவியன்
தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை பல ஆயிரம் மில்லியன்களுக்கு பத்திரிக்கை காரர்களுக்கு விற்று,உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட பிரபலங்களின் புகைப்படங்கள் பட்டியலில் இணைந்தனர்.

திருமணம் செய்யாமலே ஏழு ஆண்டுகள் குடும்பம் நடத்தி வந்த ஜோலி,பிராட் ஜோடி தற்போது தங்கள் குழந்தைகள் விருப்பத்திற்கு இணங்க திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

பல ஆண்டுகளாகவே திருமணத்தில் இணைய வேண்டும் என்பது ப்ராட்டின் ஆசை.ஆனால் முன்பு நடந்து முடிந்த இரண்டு அவசர திருமணத்தின் விளைவாக திருமணதிற்கு மறுப்பு தெரிவித்து வந்த ஜோலி தற்போது தங்கள் குழந்தைகள் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியாமல் தான் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ திரையில் மின்னும் நட்சத்திரங்கள் வாழ்வில் திரைக்கு பின்னால் இருக்கும் மேடு பள்ளங்களுக்கு ஏஞ்ஜெலினா ஜோலி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

No comments: